இந்திய அணியை சேர்ந்த இவரே அடுத்த சில மாதத்தில் உலகின் நம்பர் 1 பவுலர்- கிளார்க் கணிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் கடந்த 26ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய முன்றாம் நடைபெற்று ஆட்டம் முடிந்த நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 54 ரன்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 346 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

team 1

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் இந்திய அணி குறித்து தனது கருத்தினை தெரிவித்தார். அவர் கூறியதாவது : இந்திய அணி இந்தமுறை ஆஸ்திரேலியா அணியினை இதுவரை இந்த தொடரில் சிறப்பாக கையாண்டு வருகிறது. இந்திய அணி வெற்றி பெரும் நோக்கத்தினை கொண்டே தொடர்ந்து விளையாடிவருகிறது.

இந்திய அணியில் திறமையான பல வீரர்கள் உள்ளனர். பொதுவாக இந்திய அணியினை பொறுத்தவரை பேட்டிங்கில் திறமை வாய்ந்த பல வீரர்கள் இருப்பார்கள். பவுலிங் வெளிநாட்டு மைதானங்களில் எடுபடாமல் போகும். ஆனால், இந்த முறை இந்திய அணியில் பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பும்ரா அற்புதமாக பந்துவீசுகிறார். அடுத்த சில மாதங்களில் இவரே உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்வார் என்று கூறினார்.

pujara

மூன்று வகை போட்டியிலும் தனது திறமையினை தொடர்ந்து வெளிகாட்டிவரும் பும்ரா நிச்சயம் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவெடுப்பார் என்பதில் ஐயமில்லை. இந்நிலையில் நாளை இந்திய அணி மீதமுள்ள 5 விக்கெட்டிற்கு 70 முதல் 80 ரன்கள் வரை அடித்தால் இந்திய அணி வெற்றிக்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

இதையும் படிக்கலாமே :

குழந்தை பராமரிப்பாளராக என் வீட்டிற்கு வா- இந்திய வீரரை வம்பிழுத்த ஆஸி கேப்டன் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்