பெண்கள், சமையலறையில் 1 ரூபாயை இப்படி வைத்தால், அது சில நாட்களிலேயே பல கோடியாக மாறும். வீட்டில் வறுமை நீங்க பெண்களின் கையால் இந்த 2 விஷயங்களை செய்தாலே போதும்.

clay-bank

ஒரு வீடு செல்வ செழிப்போடு இருப்பதற்கும், வறுமையில் இருப்பதற்கும் காரணம் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் தான். ஒரு வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் திறமைசாலியாக, அதிர்ஷ்டசாலியாக, புத்திசாலியாக இருந்தால் அந்த வீடு நிச்சயமாக செல்வ செழிப்போடு இருக்கும். அதே சமயம் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் பொறுப்பே இல்லாமல் வீட்டை சரிவர கவனிக்காமல் இருக்கும் பட்சத்தில், அந்த வீட்டில் செல்வ கடாட்சம் நிலைப்பது என்பது கொஞ்சம் சந்தேகமான விஷயம் தான். எல்லா பெண்களையும் குறை கூறவில்லை. பொதுவாகவே பெண்கள் என்றாலே பொறுப்பானவர்கள் தான். சில பெண்கள் செய்யும் தவறுகளை இனி வரக்கூடிய காலங்களில் திருத்திக் கொள்வது நல்லது.

clay-bank1

சரி, வீட்டில் பணம் காசு தங்குவதற்கு பெண்கள் செய்ய வேண்டிய அந்த இரண்டு விஷயங்கள் என்னென்ன, தெரிந்து கொள்வோம் வாருங்கள். முதலில் வீட்டு சமையலறையில் எப்போதுமே சில்லரை காசுகள் சேமிக்கப்பட வேண்டும். அதுவும் பெண்களின் கையால், குறிப்பாக தென்மேற்கு மூலையில், சமையல் அறையில் ஒரு சிறிய மண் உண்டியலை வைத்து விடுங்கள். தினம்தோறும் அந்த மண் உண்டியலில் பெண்கள் தங்களுடைய கையால் ஒரு ரூபாயை சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். அந்த சேமிப்பு உங்களது சேமிப்பை எத்தனை மடங்காக உயர்ந்ததும் என்பதை நீங்களே சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக ஒரு வீட்டினுடைய பீரோ சாவி கொத்து என்பது அந்த வீட்டுப் பெண்கள் கையில் தான் இருக்க வேண்டும். அது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். வீட்டின் வரவு செலவு கணக்குகளை அந்த வீட்டின் பெண்கள் பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இதன் மூலமும் அந்த வீட்டிற்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

saavi-kothu

அந்த காலத்தில் எல்லாம் நாம் பார்த்திருப்போம். அவ்வளவாக பெண்கள் வெளியே சென்று சம்பாதிக்க மாட்டார்கள். ஆண்களுடைய சம்பாத்தியம் ஒன்று மட்டும்தான் வீட்டில் இருக்கும். இருப்பினும், வீட்டில் பெண்மணிகள் வெள்ளி சாவிக்கொத்தை தங்களுடைய இடுப்பிலேயே சொருகி வைத்திருப்பார்கள். நிறைய பெண்களுக்கு இந்த சாவிக்கொத்தை பிறந்த வீட்டில் சீதனமாக கூட வெள்ளளியில் கொடுப்பார்கள். அந்த சாவிக் கொத்தில், உங்கள் வீட்டு பீரோ சாவியை மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த சாவியை வீட்டு பெண்கள் தங்களுடைய இடுப்பிலேயே சொருகி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

உங்களுடைய வீட்டின் செலவுகளுக்காக பீரோவிலிருந்து பெண்கள் தங்களுடைய கையால், தங்களுடைய இடுப்பில் சொருகி வைத்திருக்கும் சாவிக்கொத்தை எடுத்து பீரோவில் இருந்து பணம் எடுத்து கொடுப்பதன் மூலம் பணவரவு வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருக்கும். வீண்விரயங்கள் குறைக்கப்படும். வீட்டில் சேமிப்பு இரட்டிப்பாகும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு பல மடங்காக அதிகரிக்கும்.

women2

இந்த இரண்டே விஷயங்கள் தான். சமையல் அறையில் தென்மேற்கு மூலையில் ஒரு மண் உண்டியலை வைத்து பெண்கள் உங்களுடைய கையால் ஒரு ரூபாய் பணத்தை சேமித்து வாருங்கள். அந்த பணம் உண்டியலில் நிரம்பியதும், வெளியே எடுத்து உங்களுடைய தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தவறு கிடையாது. இரண்டாவதாக வீட்டு வரவு செலவு கணக்குகளை பெண்கள் பார்க்க வேண்டும். கட்டாயமாக வெள்ளி சாவிக் கொத்தில், இரும்பு சாவியை சேர்த்து, பெண்கள் தங்களுடைய கையில் வைத்துக்கொள்வது, வீட்டிற்கு பல மடங்கு வருமானத்தை தேடித்தரும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.