தேங்காய் தானாக எழுந்து நின்று வாக்கு சொல்லும் அதிசயம் – வீடியோ

Thengai Kuri

இந்துக்கள் பசுக்களை தெய்வமாக வழிபடுவதென்பது காலம் காலமாக நடக்கும் ஒரு விடயம். அந்த வகையில் ஒரு கோவிலில் மக்கள் அனைவரும் பசுவை அம்மனின் அவதாரமாக எண்ணி வழிபடுகின்றனர். அந்த பசுவும் அனைவருக்கும் ஆசிர்வாதம் புரிகிறது. அதோடு அந்த கோவிலை நிர்வகிப்பவர் தேங்காய் கொண்டு பலருக்கு வாக்கு சொல்கிறார். அவர் வாக்கு சொல்லும் சமயத்தில் தேங்காய் தானாக எழுந்து நிற்கிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கலங்க மேடு என்னும் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தான் இது போன்ற அதிசயங்கள் நிகழ்கிறது. இந்த கோவிலில் இரண்டு மாடுகள் உள்ளன. அவைகள் சக்தியின் வடிவமாக பார்க்கப்படுகிறது. மாட்டிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு அனைவரும் வழிபடுகின்றனர். இந்த கோவிலை நிர்வகிப்பவரின் பெயர் காசி நாதன். இவர் தான் தேங்காய் வைத்து இங்கு வாக்கு கூறுகிறார்.

காசிநாதன் கூறிய வாக்கை கேட்டு பலரும் பலனடைந்துள்ளதாக அங்கு வந்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பரிகாரங்களை கூறுகிறார். அந்த பரிகாரங்கள் அனைத்து பணம் செல்லவில்லாமல் செய்ய கூடியதாக உள்ளது. பலருக்கும் இவர் மரத்தை சுற்றுவதையே பரிகாரமாக சொல்கிறார்.

இவர் வாக்கை சொல்வதற்கு காரணம் மாய குறத்தி என்ற தெய்வம் தான் என்று அவர் குறிப்பிடுகிறார். இவர் ஒருவருக்கு வாக்கு சொல்கையில் மாய குறத்தி இவரிடம் சில கணக்குகளை கூறுமாம். அந்த கணக்கின் மூலமே இவர் மக்களுக்கு பரிகாரத்தை சொல்கிறாராம். அது குறித்த ஒரு பதிவு தான் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

English Overview:
Kuri solluthal is a kind of prediction with the help of God Grace. In Kuri sollum idam one person will worship God and he or she will describe about our self and they will start telling our future.