
நம்முடைய தன்னம்பிக்கையை உயர்த்துவதற்கு உதவக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் நம்முடைய அழகு. எந்த அளவிற்கு அழகாக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. தன்னைத்தானே மெருகேற்றிக் கொள்வதற்கு தன்னம்பிக்கையும் உதவி செய்யும். அப்படி இருக்கும் பட்சத்தில் தன் முகத்தில் இருக்கக்கூடிய கருமையை போக்குவதற்கும் பொலிவிழந்த முகத்தை பொலிவாக மாற்றுவதற்கும் காபித்தூளை வைத்து எந்த முறையில் ஃபேஸ்பேக் தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய கலை இழந்த முகத்தை கலையாக மாற்றுவதற்கும், பொலிவாகவும், பிரகாசமாகவும், தென்படுவதற்கு நம் வீட்டு சமையலறையில் இருக்கக்கூடிய பொருட்களை உதவி செய்யும். அந்த பொருட்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு நிரந்தரமான எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத நல்ல மாற்றத்தை பெற முடியும் என்பது தான் உண்மை. அப்படிப்பட்ட வரிசையில் நம் அனைவரின் வீட்டிலும் இருக்கக்கூடிய காபித்துளை வைத்து செய்யக்கூடிய ஒரு ஃபேஸ் பேக்கை பற்றி தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காபி தூளில் ஆன்டி-ஆக்சைடு இருப்பதால் அது முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்கு நாம் எந்த காபித்தூளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். நமக்கு ஒரு ஸ்பூன் காபித்தூள் இருந்தால் போதும். ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் காபித்தூளை சேர்த்துவிட்டு அதில் பாதி எலுமிச்சம்பழ சாறு பிழிந்து விட வேண்டும்.
பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் அரிசி மாவு, கோதுமை மாவு, கடலை மாவு என்று தங்களிடம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு மாவை கூட இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். இப்பொழுது இதை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது உங்களுடைய முகத்தை நன்றாக கழுவி விட்டு ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இந்த ஃபேஸ் பேக்கை நன்றாக தடவி 15 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். 15 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி கழுவும் பொழுதே நம்முடைய முகம் பொலிவாக இருப்பதை உணர முடியும். இதில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழமும் சர்க்கரையும் நம் முகத்தில் இருக்கக்கூடிய மாசு மருக்களையும், தூசிகளையும், அழுக்குகளையும் நீக்கக்கூடியது.
மேலும் இது ப்ளீச்சிங் ஏஜென்ட் நிறைந்ததாகவும் திகழ்வதால் இது உடனடி பலனை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. மேலும் 15 நிமிடத்தில் நம்முடைய முகத்தை பழிங்கு போல மாற்றுவதற்கு இந்த முறையில் முயற்சி செய்து பார்த்தாலே போதும். நல்ல பலனை நம்மால் பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: முடி அடர்த்தியாக ஜெல் தயாரிக்கும் முறை
மிகவும் எளிமையான இந்த காபித்தூள் ஃபேஸ் பேக்கை நாமும் பயன்படுத்தி நம்முடைய முகத்தை பொலிவுடன் அழகாகவும் ஆக்கிக் கொள்ளலாம்.