மூக்கடைப்பு மற்றும் தலைபாரம் 5 நிமிடத்தில் சட்டென நீங்க நம் பாரம்பரிய பாட்டி வைத்தியம் தெரியுமா?

cold2

எந்த காலம் என்றாலும் ஒரு சிலருக்கு அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளும் தொந்தரவு இருக்கும். இதனால் மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் ஒழுகுதல் போன்ற பிரச்சனை உண்டாகி அன்றைய நாள் முழுவதும் ஒரு விதமான அசவுகரியத்தை உணர வைத்து விடும். மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனை ஆரம்பிக்கும் பொழுதே இந்த விஷயங்களை செய்து பார்த்தால் ஐந்தே நிமிடத்தில் சட்டென இவைகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

cold

சளி தொந்தரவு என்பது பெரும்பாலும் குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே பிரிட்ஜ் முழுவதும் ஜில்லென்று தண்ணீர், ஜூஸ் பாட்டில்களை அடுக்கி வைப்பது உண்டு. வெயிலுக்காக குடிக்கும் இத்தகைய பானங்கள் எல்லோருக்கும் ஏற்றது அல்ல. உடலில் இருக்கும் உஷ்ணத்தை தணிக்க அந்த நேரத்திற்கு இவை நமக்கு பேருதவி செய்வதாக தான் தோன்றும்.

ஆனால் உண்மையில் இத்தகைய பானங்கள் உடலில் இருக்கும் சூட்டைக் கிளப்பி வெப்பத்தை சமநிலை இழக்க செய்து சளி போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் தான் ஜில்லென்று ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்களுக்கு உடனே ஜலதோஷம் பிடிக்கிறது. மேலும் இத்தகைய செயற்கையாக கொடுக்கக்கூடிய குளிர்ச்சி தொண்டையில் சென்று அலர்ஜியை உண்டு பண்ணி தொண்டை புண் ஏற்பட வழிவகுக்கும்.

cold1

கூடுமானவரை இயற்கையான உணவுகளையும், இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய பானங்களையும் குடிப்பது நல்லது. இளநீர், தர்பூசணி, கிர்ணி, கொய்யா, திராட்சை போன்ற பழச்சாறுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இயற்கையாகவே உடல் குளிர்ச்சி அடையும். கோடை காலத்தில் இருந்து வெப்பத்தின் தாக்கத்தை தனித்து இது போன்ற பிரச்சினைகளை வராமல் தடுக்கும். சரி இப்பொழுது மூக்கடைப்பு, சளி போன்ற பிரச்சினைகள் ஏற்படும் பொழுது நாம் என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்.

நம் முன்னோர்கள் பழங்காலத்தில் கடைப்பிடித்து வந்த இந்த விஷயத்தை செய்தால் இரண்டே நிமிடத்தில் மூக்கடைப்பு சரியாகிவிடும். 2, 3 மிளகுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு ஊசியால் கோர்த்து அடுப்பில் நெருப்பை மூட்டி காண்பியுங்கள். மிளகு எரிந்து அதிலிருந்து மெல்லியதாக புகை எழும்ப ஆரம்பிக்கும். அப்புகையை மூக்கு துவாரங்களுக்கு அருகில் சென்று சுவாசிக்கும் பொழுது மூக்கடைப்பு, தலைபாரம் போன்ற பிரச்சினைகள் நொடியில் நீங்கும்.

head-ache

சிலருக்கு தலை முழுவதும் நீர் கோர்த்து கண்களை திறக்க முடியாத அளவிற்கு அவதிப்படுவார்கள். அவர்கள் ஒரு ஸ்பூன் அளவிற்கு பொட்டுக்கடலை எடுத்துக் கொள்ளுங்கள். பொட்டுகடலைக்கு உடலில் சேரும் தேவையற்ற நீரை உறிஞ்சிக் கொள்ளும் ஆற்றல் உண்டு. அதனுடன் நான்கிலிருந்து ஐந்து மிளகுகள் மற்றும் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். இப்படி செய்யும் பொழுது தொண்டை புண், மூக்கடைப்பு, அலர்ஜி, மூக்கு ஒழுகுதல், தலைபாரம் ஆகிய பிரச்சினைகள் உடனடியாக தீர்ந்துவிடும்.