நாளை அத்தி வரதர் நின்ற நிலை தரிசனம். மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

athi-varadhar

திருமால் பெருமைக்கு நிகர் ஏதுமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. தன்னை இகழ்பவர்களுக்கே வாரி வழங்கும் குணம் கொண்ட நாராயணாகிய திருமால் ஆத்மார்த்தமாக வழிபடும் பக்தர்களுக்கு எவ்விதக் குறைகளும் ஏற்படாமல் காப்பார் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய திருமாலுக்குரிய புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் இருக்கிறது. அங்கு தற்போது மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் அத்தி வரதர் தரிசன வைபவம் குறித்த ஒரு சிறப்பு தகவலை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நின்றான், கிடந்தான் என்கிற சொற்தொடரை வைணவ அடியார்கள் திருமாலின் விக்கிரகம் பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் நிலைகளை குறிப்பிட பயன்படுத்துவர். நமது நாட்டில் இருக்கின்ற பெரும்பாலான வைணவ ஆலயங்களில் பெருமாள் அனந்த சயனம் எனப்படும் படுத்திருக்கும் கோலத்திலும் அல்லது சர்வ அலங்காரங்களுடன் நின்றிருக்கும் கோலத்திலும் மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் தருகின்றார்.

பல்வேறு சிறப்புகள் மிகுந்த வைணவ திவ்ய தேச கோயில்களில் ஒன்றான காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் மட்டும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில் திருக்குளத்தில் இருந்து வெளிவரும் அத்தி மரத்தில் பிரம்மதேவரால் செய்யப்பட்டதாக கூறப்படும் அத்தி வரதர் திருவிக்கிரகம் சில நாட்களுக்கு முன்பு சயன கோலத்தில் தரிசனம் தந்த நிலையில் நாளை முதல் சில நாட்களுக்கு நின்றிருந்த கோலத்திலும் தனது பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் தரவிருக்கிறார்.

athi varadhar

இந்நிலையில் நேற்று ஊடகத்தினரை சந்தித்த காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அதாவது பொது தரிசனத்திற்கு வருபவர்கள் வரதராஜ பெருமாள் கோயிலின் கிழக்கு கோபுரம் வழியாக சென்று அத்திவரதரை தரிசனம் செய்கிறார்கள். மேலும் பொதுதரிசன வழியில் செல்பவர்கள் பல மணிநேரம் கழித்தே அத்திவரதரை தரிசனம் செய்ய நிலை இருக்கிறது. மேலும் ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம் தரவிருக்கிறார். இதற்காக 31.07.19 அன்று தேவராஜ பெருமாள் கோயிலின் கிழக்கு கோபுரம் 12 மணிக்கு மூடப்படும் எனவும். அதற்குப் பிறகு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அன்றைய தினம் 12 மணிக்குள் வந்தவர்கள் மாலை 5 மணிவரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடியும். வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். எனவே அத்தி வரதர் தரிசனத்திற்கு செல்பவர்கள் முறையாக திட்டமிட்டு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்வது சிறப்பு.

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதர் தரிசனம் குறித்த முக்கிய அறிவிப்பு

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Collector on athi varadar in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadar darshan 2019 in Tamil or Athi varadhar seidhigal in Tamil.