மூன்று கொம்புகள் கொண்ட அதிசய மாடு – வீடியோ

cow with 3 horn

அனைத்து உயிர்களையும் மனிதனின் உயிருக்கு சமமானதாக கருதும் புராதனமான மதங்கள் பல தோன்றிய நாடு நமது பாரத நாடு. அதிலும் இந்து மதத்தில் வழிபடபடும் பல தெய்வங்களுக்கு ஒவ்வொருவகையான விலங்கினத்தை வாகனமாக வைத்து, அவை காரணமேயின்றி கொல்லப்படுவதை தடுக்க அறிவுபூர்வமாக செயல் பட்டனர் நமது முன்னோர்கள். சமயங்களில் இத்தகைய விலங்குகள் இறைத்தன்மை கொண்டது என நிரூபிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு காணொளியை இங்கு காணலாம் வாருங்கள்.

இக்காணொளி ஏதோ ஒரு வட இந்திய மாநிலத்தில் இருக்கும் கோயில் பகுதியில் ஒரு பக்தரால் தனது கைபேசி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மாடு ஒன்று பக்தர்கள் அருகே வருவதை காணலாம். இதில் அதிசயம் என்னவென்றால் அந்த மாட்டிற்கு 2 கொம்புகளுக்கு பதிலாக 3 கொம்புகள் இருப்பதாகும். அவ்வப்போது உலகின் பல பகுதிகளிலும் இப்படியான அதிசய தன்மைகள் கொண்ட விலங்குகள் தோன்றுவது சகஜம் என்றாலும், 3 கொம்புகளை கொண்ட மாடுகளை காண்பது மிகவும் அதிசயமான ஒன்றாகும்.

இந்து மதத்தில் சிவபெருமானின் வாகனமாக இருப்பது ஆண் மாட்டினமான எருது ஆகும். இந்த எருது வாகனத்தை நந்தி தேவராக இந்துக்கள் வழிபடுகின்றனர். அதிலும் இக்காணொளியில் நாம் காணும் மாட்டின் மூன்று கொம்புகள் சிவபெருமானின் திரிசூலத்தையும், அதன் தலையில் இருக்கும் நடு கொம்பின் கீழ் உள்ள பகுதி சிவனின் நெற்றிக்கண் போன்ற தோற்றத்தை கொடுப்பதாலும், இதை சிவாம்சம் கொண்ட ஒரு விலங்காக கருதுகின்றனர்.

இந்திய நாடு பண்டை காலம் முதலே பசு மற்றும் காளைகளை இறைத்தன்மை நிறைந்த ஒரு விலங்காகவே பாவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. இக்காணொளியில் நாம் காணும் மாடும் ஒரு கோயிலை சார்ந்ததாகவும், அதிலும் இறைத்தன்மை கொண்ட ஒரு மாடாக கருதப்பட்டு அங்கிருக்கும் பக்தர்கள் அந்த மாட்டை வணங்கியும், அதற்கு உணவு தந்தும் தங்களின் பக்தி மற்றும் மரியாதையை செலுத்துகின்றனர்.