நீண்ட நாட்களாக உங்களுடைய பற்களில் இருக்கும் பழுப்பு நிறத்தையும், படிந்திருக்கும் கறையையும் முழுமையாக நீக்க வேண்டுமா? உங்களுக்கான டிப்ஸ்.

tooth-tips

நம்முடைய முகத்தை அழகுபடுத்த கூடிய விஷயம் என்றால் அது சிரிப்பு. அந்த சிரிப்பை மேலும் அழகாக வெளிப்படுத்த வேண்டும் என்றால் நம்முடைய பற்கள் வெண்மை நிறமாக, அழகாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் வாயைத் திறந்து சிரிக்க வேண்டும் என்ற எண்ணமே வரும். இல்லாவிட்டால் பல்லின் பழுப்பு நிறமும், கறையும் எங்கே வெளியில் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் சிரிக்காமலே விட்டுவிடுவோம். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? உங்களின் பற்கள் பழுப்பு நிறமாகவும் கறைபடிந்ததாகவும் இருக்கிறதா? உடனே மாற்றிவிடலாம். இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

tooth

நீங்கள் அதிகமாக காஃபி அல்லது தேநீர் குடிப்பவர்களாக இருந்தால், உங்களது பற்கள் வெண்மை நிறத்தை சீக்கிரமாக இழந்துவிடும். காபியோ, தேநீரோ குடித்த பின்பு வாயை தண்ணீர் ஊற்றி நன்றாக கொப்பளித்து விடவேண்டும். இதே போன்று நிறம் ஒட்டும் காய்கறிகள், பழவகைகளை சாப்பிட்ட பின்பு வாயை முறையாக சுத்தம் செய்துவிட வேண்டும். எடுத்துக்காட்டாக தக்காளி சாஸ்,  சோயா பீன்ஸ், பீட்ரூட் இந்த பொருட்கள் எல்லாம் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

இயற்கையான பொருட்களை வைத்து நம்முடைய பற்களின் பழுப்பு நிறத்தை சுலபமாக போக்கிவிடலாம். கல் உப்பை இடித்து தூள் செய்து கொள்ளுங்கள். பற்களில் மட்டும் நறநறவென்று தேய்த்தால், பற்களில் இருக்கும் பழுப்பு நிறம் நாளடைவில் நீங்கிவிடும். ஈறுகளில் தேய்த்து விடக் கூடாது.

orange-peel

இரவு நேரத்தில் தூங்க செல்வதற்கு முன்பாக ஆரஞ்சு பழத்தோலை பற்களில் நன்றாகத் தேய்த்து, அப்படியே தூங்கி விட வேண்டும். மறுநாள் காலை எழுந்து பற்களை எப்போதும் போல் சுத்தம் செய்வதன் மூலம் வாயில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் நீங்கி பற்கள் வெண்மை நிறத்தை அடையும். இதேபோல் எலுமிச்சை பழத் தோலையும் பல் தேய்ப்பதற்கு பயன்படுத்தலாம்.

- Advertisement -

ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில் இந்த இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து பற்களை தேய்த்து வந்தால் பல் அழகாகவும், மென்மையாகவும் மாறும்.

carrot

தினம் ஒரு கேரட்டை உணவில் சேர்ப்பதன் மூலம் நம் உடல் ஆரோக்கியம் அடைந்து நம்முடைய பற்கள் வெண்மை நிறத்தை அடையும். சில பேருக்கு உடலில் வைட்டமின் சத்து குறைவு காரணமாக கூட பல் மஞ்சள் நிறமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது பல்லிற்கு மிகவும் நல்லது.

கொஞ்சம் வேப்ப இலைகளை எடுத்து சிறிதளவு பால் ஊற்றி நன்றாக அரைத்து நீங்கள் தேய்க்கும் பேஸ்ட்டோடு கலந்து, பல் தேய்த்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கி பற்கள் அழகாக மாறும்.

பேக்கிங் சோடாவில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து, பேஸ்ட் உடன் கலந்து பல் தேய்த்தால் பல் வெண்மை நிறமாக மாறும். ஆனால் இதை தினம்தோறும் பயன்படுத்தக்கூடாது. பல் உடைந்து போக வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வெற்றிலை பாக்கு போட்ட கறை, பீடா போட்ட கறை உங்கள் பற்களில் வெகு நாட்களாக தங்கி இருந்தால், வெதுவெதுப்பான நீரில், பொட்டாசியம் பர்மாங்கனேட் என்னும் வேதிப்பொருளை கலந்து வாயைக் கொப்புளிக்க வேண்டும். இந்த வேதிப்பொருளானது தண்ணீரில் கலந்தவுடன் அந்த தண்ணீர் ஊதா நிறமாக மாறிவிடும். அந்த தண்ணீரை வாயில் ஊற்றி கொப்பளித்து, பின் கறை உள்ள இடங்களை பிரஷில் மெதுவாக தேய்த்தால் கறை முழுமையாக நீங்கி உங்களது பற்கள் பழைய நிலைமைக்கு வந்து விடும். இந்த வேதிப்பொருளை தண்ணீரில் கலக்கும் போது தண்ணீர் உவர்ப்பு தன்மையாக மாறிவிடும்.

oil pulling

தண்ணீரில் இந்த வேதிப்பொருளை அதிகமாக கலந்துவிட வேண்டாம். அப்படி கலக்கும் போது தண்ணீர் அடர் ஊதா நிறத்திற்கு மாறிவிடும். தண்ணீரில் இருக்கும் உவர்ப்பு தன்மை அதிகமாகும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு உஷாராக இந்த முறையை பின்பற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே
என்ன செய்தாலும் முடி உதிர்வு நிற்கவில்லையா? முடி வளரவில்லையா? இதோ தீர்வு!

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pal karai neenga tips in Tamil. Pal manjal karai neenga Tamil. Teeth yellow remove in Tamil. Teeth whitening tips in Tamil. Teeth whitening at home.