ஏற்கனவே இருந்த நோய்களும்! இனி நோய் வராமல் இருக்கவும்! செல்ல வேண்டிய தன்வந்திரியின் சக்தி வாய்ந்த மந்திரம் இதோ!

dhanvantari2

நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பவர் தன்வந்திரி பகவான் ஆவார். தன்வந்திரி பகவான் வழிபாடு செய்பவர்களுக்கு ஏற்கனவே உடலில் இருக்கும் நோய்களும், இனி வர இருக்கும் பிணிகளும் தீரும் என்பது நம்பிக்கை. மனித குலத்திற்கு ஆயுர்வேதத்தை அளித்த தன்வந்திரி பகவான்! பாற்கடலில் இருந்து தோன்றிய அமிர்த கலசத்தில் இருந்து உருவானவர் தன்வந்திரி பகவான் ஆவார். தினமும் இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் கூட போதும்! எவ்விதமான நோய்களும் நம்மை அண்டுவதில்லை என்கிறது சாஸ்திரம். தன்வந்திரி பகவான் 108 போற்றி இப்பதிவில் காணலாம்.

தன்வந்திரி 108 போற்றி
dhanvantiri 2

1. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி!
2. ஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றி!
3. ஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றி!
4. ஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றி!
5. ஓம் அச்சம் போக்குபவரே போற்றி!

6. ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி!
7. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி!
8. ஓம் அன்பு கொண்டவரே போற்றி!
9. ஓம் அமரர் தெய்வமே போற்றி!
10. ஓம் அகிலம் புகழ்வோனே போற்றி!

dhanvantri

11. ஓம் அட்சய பாத்திரமே போற்றி!
12. ஓம் அருளை வழங்குபவரே போற்றி!
13. ஓம் அடைக்கலம் தருபவரே போற்றி!
14. ஓம் அழிவற்றவரே போற்றி!
15. ஓம் அழகுடையோனே போற்றி!

- Advertisement -

16. ஓம் அமிர்தகலசம் ஏந்தியவரே போற்றி!
17. ஓம் அமைதியின் வடிவே போற்றி!
18. ஓம் அல்லல் தீர்ப்பவரே போற்றி!
19. ஓம் அனைத்தும் அறிந்தவரே போற்றி!
20. ஓம் அண்டமெல்லாம் நிறைந்தாய் போற்றி!

21. ஓம் ஆயுர்வேத தலைவரே போற்றி!
22. ஓம் ஆரோக்கியம் தருபவரே போற்றி!
23. ஓம் ஆயுள் பலம் நீட்டிப்பாய் போற்றி!
24. ஓம் ஆயுதக்கலை நிபுணரே போற்றி!
25. ஓம் ஆத்ம பலம் தருபவரே போற்றி!

26. ஓம் ஆசாபாசம் அற்றவரே போற்றி!
27. ஓம் ஆனந்த ரூபனே போற்றி!
28. ஓம் ஆகாயத் தாமரையே போற்றி!
29. ஓம் ஆற்றலின் வடிவே போற்றி!
30. ஓம் உள்ளம் நிறைந்தவரே போற்றி!

dhanvantari

31. ஓம் உலக ரட்சகரே போற்றி!
32. ஓம் உலக நாதனே போற்றி!
33. ஓம் உலக சஞ்சாரியே போற்றி!
34. ஓம் உலகாள்பவரே போற்றி!
35. ஓம் உலகம் காப்பவரே போற்றி!

36. ஓம் உயிர்களின் காவலரே போற்றி!
37. ஓம் உயிர் தருபவரே போற்றி!
38. ஓம் உயிர்களின் உறைவிடமே போற்றி!
39. ஓம் உண்மை சாதுவே போற்றி!
40. ஓம் எங்கும் நிறைந்தவரே போற்றி!

41. ஓம் எமனுக்கு எமனானவரே போற்றி!
42. ஓம் எழிலனே போற்றி!
43. ஓம் எளியார்க்கும் எளியவரே போற்றி!
44. ஓம் எல்லாம் தருபவரே போற்றி!
45. ஓம் எல்லையில்லா தெய்வமே போற்றி!

46. ஓம் எவர்க்கும் நோய் தீர்ப்பாய் போற்றி!
47. ஓம் எல்லா பொருளின் இருப்பிடமே போற்றி!
48. ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி!
49. ஓம் எதற்கும் மருந்தளிப்பாய் போற்றி!
50. ஓம் கண்ணுக்கு கண்ணானவரே போற்றி!

dhanvantari

51. ஓம் கருணைக் கடலே போற்றி!
52. ஓம் கருணை அமுதமே போற்றி!
53. ஓம் கருணா கரனே போற்றி!
54. ஓம் காக்கும் தெய்வமே போற்றி!
55. ஓம் காத்தருள் புரிபவரே போற்றி!

56. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி!
57. ஓம் காவிரிக்கரை வாழ்பவரே போற்றி!
58. ஓம் குருவே போற்றி!
59. ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி!
60. ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே போற்றி!

dhanvantari1

61. ஓம் சகல நன்மை தருபவரே போற்றி!
62. ஓம் சகல செல்வம் வழங்குபவரே போற்றி!
63. ஓம் சகல நோய் தீர்ப்பவரே போற்றி!
64. ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி!
65. ஓம் சகிப்புத் தன்மை மிக்கவரே போற்றி!

66. ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவரே போற்றி!
67. ஓம் சமத்துவம் படைப்பவரே போற்றி!
68. ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி!
69. ஓம் சர்வ லோகாதிபதியே போற்றி!
70. ஓம் சர்வேஸ்வரனே போற்றி!

dhanvantari3

71. ஓம் சர்வ மங்களம் அளிப்பவரே போற்றி!
72. ஓம் சந்திரனின் சகோதரரே போற்றி!
73. ஓம் சிறப்பாற்றல் கொண்டவரே போற்றி!
74. ஓம் சித்தி அளிப்பவரே போற்றி!
75. ஓம் சித்தமருந்தே போற்றி!

76. ஓம் ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவரே போற்றி!
77. ஓம் சுகம் அளிப்பவரே போற்றி!
78. ஓம் சுகபாக்யம் தருபவரே போற்றி!
79. ஓம் சூரியனாய் ஒளிர்பவரே போற்றி!
80. ஓம் சூலைநோய் தீர்ப்பாய் போற்றி!

dhanvantari4

81. ஓம் தசாவதாரமே போற்றி!
82. ஓம் தீரரே போற்றி!
83. ஓம் தெய்வீக மருந்தே போற்றி!
84. ஓம் தெய்வீக மருத்துவரே போற்றி!
85. ஓம் தேகபலம் தருபவரே போற்றி!

86. ஓம் தேவாதி தேவரே போற்றி!
87. ஓம் தேஜஸ் நிறைந்தவரே போற்றி!
88. ஓம் தேவாமிர்தமே போற்றி!
89. ஓம் தேனாமிர்தமே போற்றி!
90. ஓம் பகலவனே போற்றி!

dhanvantari5

91. ஓம் பட்டதுயர் தீர்ப்பாய் போற்றி!
92. ஓம் பக்திமயமானவரே போற்றி!
93. ஓம் பண்டிதர் தலைவரே போற்றி!
94. ஓம் பாற்கடலில் தோன்றியவரே போற்றி!
95. ஓம் பாத பூஜைக்குரியவரே போற்றி!

96. ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி!
97. ஓம் புருளஷாத்தமனே போற்றி!
98. ஓம் புவனம் காப்பவரே போற்றி!
99. ஓம் புண்ணிய புருஷரே போற்றி!
100. ஓம் பூஜிக்கப்படுபவரே போற்றி!

dhanvantari6

101. ஓம் பூர்ணாயுள் தருபவரே போற்றி!
102. ஓம் மரணத்தை வெல்பவரே போற்றி!
103. ஓம் மகா பண்டிதரே போற்றி!
104. ஓம் மகாவிஷ்ணுவே போற்றி!
105. ஓம் முக்தி தரும் குருவே போற்றி!

106. ஓம் முழு முதல் மருத்துவரே போற்றி!
107. ஓம் சக்தி தருபவரே போற்றி!
108. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி! போற்றி!!