ஸ்டம்பிங்கில் உங்களை மிஞ்ஜ உலகில் வேறுயாருமில்லை தோனி சார். மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் – வைரல் வீடியோ

dhoni-keeping

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டாஸ் 50 ஓவர்கள் முடிவில் 324 ரன்களை குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் 87 ரன்களையும் தவான் 66 ரன்களையும் குவித்து சிறப்பான துவக்கத்தினை அளித்தனர்.

dhoni

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக குப்தில் மற்றும் முன்ரோ ஆகியோர் களமிறங்கினர். குப்தில் மற்றும் ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் வெளியேறினார். முன்ரோ 31 ரன்களில் வெளியேறினார். அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார்.

அவருடன் இறங்கிய ராஸ் டெய்லர் 25 பந்துகளை சந்தித்த நிலையில் 18 ஆவது ஓவரை வீசவந்தார் ஜாதவ். அந்த ஓவரில் 22 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் தோனி மூலம் ஸ்டம்பிங் செய்யப்பட்டார் . தோனி கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். கடந்த போட்டியின்போதும் இதுபோன்று ஒரு ஸ்டம்பிங் செய்திருந்தார் தோனி. இன்றைய போட்டியின் தோனியின் ஸ்டம்பிங் இதோ :

இந்த வயதிலும் இவரது வேகம் அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த வருடத்தின் ஆரம்பம் முதலே தோனி அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

தொடர்ந்து இரு சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி என்று அசத்திய வில்லியம்சன் அடுத்த பந்திலே அவரை தூக்கிய இந்திய பந்துவீச்சாளர் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்