பாய், தலையணை, மெத்தையில் இருந்து வரும் தோஷங்கள் நீங்க இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள்!

bed-theertham-padikaram
- Advertisement -

பொதுவாகவே தோஷங்கள் என்பது எல்லாவற்றிற்கும் உண்டு. எல்லாப் பொருளிலும், எல்லா விஷயங்களிலும் தோஷங்கள் ஏற்படும். அப்படி ஏற்படும் தோஷங்கள் நமக்கு தீங்குகளை விளைவிக்கும். அன்னத்தால் ஏற்படும் தோஷத்தை அன்ன தோஷம் என்பார்கள். சாப்பாட்டை வீணடிப்பது, கால்களால் மிதிப்பது போன்றவற்றை செய்தால் அந்த தோஷம் ஏற்படுகிறது. அதே போல நாம் படுக்கும் பாய், தலையணை, மெத்தைக்கும் தோஷங்கள் உண்டு. இவற்றிலிருந்து தோஷ நிவர்த்தி பெற என்ன செய்ய வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

paai2

எப்பொழுதும் நாம் ஒருமுறை தூங்கி எழுந்த பின் நாம் தூங்குவதற்கு பயன்படுத்திய பொருட்களை கழுவி வைத்து சுத்தம் செய்துவிட வேண்டும். ஆனால் இன்று இருக்கும் வேலைப் பளு காரணமாக இவற்றை நம்மால் தினமும் செய்வது என்பது முடியாத காரியம். ஒவ்வொரு தூக்கமும் ஒரு மரணம் தான். தூக்கத்திலேயே உயிர்விட்டு இறந்தவர்கள் எவ்வளவோ பேர் உண்டு. தூங்கும் பொழுது நம்முடைய ஆத்மா நம்மிடம் இருப்பதில்லை.

- Advertisement -

ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்களை அசை போட்டுப் பார்க்க அது வெளியில் சென்று விட்டு வரும். மீண்டும் நம்மிடம் வரும் என்பது நிச்சயமில்லை. இதனால் தூக்கமும் மரணத்திற்குச் சமமானது தான் என்கிறது சாஸ்திரம். எனவே ஒவ்வொரு முறை தூங்கி எழும் போதும் தோஷம் உண்டாகிறது. மேலும் கணவன் மனைவி இருவரும் பயன்படுத்தும் படுக்கைகள் அத்தனையும் தோஷம் பெறுகிறது எனவே தினமும் முடியாவிட்டாலும் வாரம் ஒரு முறையாவது கட்டாயம் நன்கு துவைத்து வெயிலில் உலர்த்தி விட்டு எடுத்து வைக்க வேண்டும்.

bed-room

தினமும் நம்மால் இவ்வாறு துவைக்க முடியாத காரணத்தினால் இந்த தோஷம் நீங்க எளிய வழியில் தோஷ நிவர்த்தி செய்து விடலாம். இந்த தோஷம் ஏற்படுவதால் என்ன கெடு பலன்கள் ஏற்படும்? என்பதை பார்ப்போம். பாய், தலையணை, மெத்தை போன்ற உறங்கும் பொருட்களிலிருந்து வரும் தோஷங்கள் நமக்கு நிம்மதியான உறக்கத்தை முதலில் தருவதில்லை.

- Advertisement -

தூங்கியவுடன் நிம்மதியான தூக்கம் பெறுவதற்கு இந்த தோஷம் நிவர்த்தி ஆகி இருக்க வேண்டும். கெட்ட கனவுகள், தீய அதிர்வுகள் போன்றவை ஏற்படும். திடீரென பயந்து எழுவது போன்றவற்றை இந்த தோஷம் ஏற்படுத்தும். பெரியவர்களை விட சிறு குழந்தைகளுக்கு இந்த தோஷம் ஆபத்துகளை கொடுக்கும் என்பதால் குழந்தைகள் படுக்கும் தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை ஆவது கட்டாயம் தினமும் துவைத்து காயப் போட்டு விடுவது நல்லது.

padikaram

அப்படி முடியாத பட்சத்தில் சிறிதளவு சுத்தமான தண்ணீரில் படிகாரம் துண்டு ஒரு சிறு அளவு எடுத்து நன்கு நுணுக்கி போடுங்கள். அதனுடன் ஒரு சிட்டிகை அளவிற்கு கல் உப்பு மற்றும் சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல பச்சைக்கற்பூரம் ஒரு துளி போட்டு நன்கு கலந்து விடுங்கள். இதனை ஸ்பிரேயர் பயன்படுத்தி அல்லது வேப்பிலைகளை பயன்படுத்தி தலையணை, படுக்கை விரிப்புகள், பாய் என்று நாம் படுக்க பயன்படுத்தும் அத்தனை பொருட்களிலும் தெளித்து விடுங்கள். தோஷங்கள் விலகி நிம்மதியான தூக்கம் வரும். கெட்ட சொப்பனங்கள் நீங்கி நல்ல அதிர்வலைகள் உண்டு பண்ணும். இதைப் தெளித்தால் மட்டும் போதாது. வாரம் ஒரு முறை கட்டாயம் துவைத்து வெயிலில் உலர்த்துவது தான் மிகவும் முக்கியம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -