பானை வடிவில் லிங்கம், பாதாள நீரில் லிங்கம். இப்படி 16 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட 1000 வித்யாசமான லிங்கங்கள் எங்குள்ளது தெரியுமா?

paanai lingam
- Advertisement -

நாம் எத்தனையோ விந்தையான பல சிவ லிங்கங்களை கண்டு தரிசித்திருப்போம், வியந்திருப்போம். ஆனால் பானை விடிவில் உள்ள சிவ லிங்கத்தை காண்பது என்பது அரிதினும் அரிதான ஒரு விடயம். அதே போல நீருக்கு அடியில் லிங்கம், சிறிய லிங்கம், பெரிய லிங்கம் இப்படி பல அதிசய சிவ லிங்கங்கள் ஒரே இடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் அமைந்துள்ளது. அந்த கோவில் குறித்த பல தகவல்களை இந்த பதிவில் விரிவாக காண்போம் வாருங்கள்.

kugai

மகாராஷ்டிரா மாநிலம், சட்டரா மாவட்டம், பட்டேஸ்வர் என்னும் ஊரில் அமைந்துள்ளது சிவனுக்காக 7 குகை கோவில்கள். 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில்கள் சற்று சிதிலம் அடைந்திருந்தாலும் கோவிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் சிறப்பாகவே உள்ளது.

- Advertisement -

இங்கு 1000 சிவலிங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. சிவலிங்கம் மட்டும் அல்லாமல், பிரம்மா, விஷ்ணு, சரஸ்வதி, அக்னி நவகிரகம் உள்ளிட்ட பல்வேறு சிலை வடிவங்களும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே போல கோவில் தூண்களில் சர்ப்பத்தின் வடிவங்களும் காணப்படுகின்றன.

paanai

பானை வடிவில் இங்கு அமைந்துள்ள சிவ லிங்கம் பெரிதும் சக்திவாந்த லிங்கமாக பார்க்கப்படுகிறது. பானை வடிவிலான லிங்கத்திற்கு கும்பேஸ்வர் என்று பெயர். லிங்கத்தின் அடித்தளத்திக்கு மேல் இரண்டு பானை வடிவங்கள் உள்ளன.

- Advertisement -

இந்த குகை கோவிலில் சில இடங்களில் நீர் சூழப்பட்டு அந்த நீருக்கு அடியில் சிவலிங்கங்கள் இருக்கின்றன. அதே போல லிங்க வடிவில் உள்ள லிங்கத்தினுள் சிறு சிறு லிங்கங்கள் வடிவமைக்கப்பட்டு பார்ப்பதற்கே மெய் சிலிர்க்க வைக்கிறது.

sivan

இது தவிர வித்யாசமான பல வடிவங்களில் இங்கு பல சிவங்களின்களை காண முடியும். ஏராளமான பல வடிவ சிவலிங்கங்களை ஒரே இடத்தில் தரிசிக்க விரும்புபவர்கள் நிச்சயம் இங்கு சென்று தரிசிக்கலாம். இங்கு சத்குரு கோவிந்தானந்தசாமி மகாராஜ் மட் என்று அழைக்கப்படும் ஒரு மடம் உள்ளது. சாதுக்கள் பலர் சேர்ந்து அந்த மடத்தை நிர்வகித்து வருகின்றனர்.

paambu

இங்குள்ள கோவில்களுக்கு பெரும்பாலும் பக்தர்கள் சிவராத்திரி மற்றும் திங்கட்கிழமைகளில் மட்டுமே வந்து சிவனை தரிசித்துவிட்டு செல்கின்றனர். மற்ற நாட்களில் இங்கு அவ்வளவாக ஆள் நடமாட்டமே இருப்பதை என்று அந்த ஊரை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -