தெய்வாம்சம் உடைய 5 பெண் ராசிகள்! இந்த ராசியில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே தெய்வாம்சம் கொண்டவர்களாக இருப்பார்களாம் தெரியுமா?

lakshmi-women

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான தன்மைகள் இருக்கும். குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட குணாதிசயம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரே ராசியில் பிறந்தவர்கள் ஒரே விதமான சில குணாதிசயங்களையும், அம்சங்களையும் கொண்டு இருப்பது இயல்பானது தான். அந்த வகையில் இந்த 5 ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தெய்வீக அம்சம் உடையவர்களாக இருப்பார்களாம். அப்படியான ராசிகள் என்னென்ன? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

gajalakshmi

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் அதிர்ஷ்டசாலிகள் தான். ராசியில் முதல் ராசியாக இருக்கும் மேஷ ராசி பெண்கள் பிறக்கும் பொழுதே இயல்பான தோற்றம் தெய்வாம்சம் பொருந்தியதாக இருக்கும். மகாலட்சுமியே பிறந்ததாக நினைத்து குடும்பத்தில் இருப்பவர்கள் கொண்டாடுவார்கள். சாமுத்ரிகா லட்சணம் கொண்ட இவர்கள் மகாலட்சுமியின் அருள் பெற்றவர்கள் என்றே கூறலாம். இவர்களை மணந்து கொள்ளும் ஆண் யோகம் செய்தவராக இருக்க வேண்டும் என்றால் இவர்களை மதித்து நடந்தாலே போதும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தெய்வாம்சம் பொருந்தியவர்கள். இவர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களை எப்பொழுதுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். இரக்க சுபாவமும், அக்கறையும் அதிகம் கொண்டுள்ள சிம்ம ராசிப் பெண்கள் எதிலும் வெற்றியை காணக் கூடியவர்கள். அறிவிலும், வீரத்திலும் சிறந்தவர்களாக இருக்கும் சிம்ம ராசிப் பெண்கள் கடவுளின் அருளை பெற்றவர்கள். இவர்களை சுற்றி இருப்பவர்கள் நல்லவர்களாக இருந்தால் இவர்களால் பலருக்கும் நன்மை உண்டாகும். கெட்டவர்களாக இருந்து விட்டால் அது அவர்களுக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசியில் பிறந்த பெண்கள் பிறப்பு முதல் இறப்பு வரை நியாயத்திற்கு மட்டுமே கட்டு படுபவர்கள். இவர்கள் கடவுளைப் போலவே நீதிக்கும், நியாயத்திற்கும் துணை நிற்பவர்கள். எல்லோரையும் நேசிக்கும் துலாம் ராசியில் பிறந்த பெண்கள் ஆழமாக மனதில் நினைக்கும் நிறைய விஷயங்கள் உண்மையில் நடக்கும். இவர்கள் சொல்லும் வாக்கு பெரும்பாலும் பலிதமாகும். மிகுந்த அன்பும், நேசமும் கொண்ட இவர்களுக்கு தேவையானது உண்மையான பாசம் தான். காசு பணத்தைக் பெரிதாக நினைக்காதவர்கள் துலாம் ராசிக்கார பெண்கள். எனவே இவர்களிடம் எப்பொழுதும் தெய்வாம்சம் நிறைந்து இருக்கும். இவர்களை மணந்து கொள்ளும் ஆண் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருக்க இனிமையுடன் நடந்து கொண்டாலே போதும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசியில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் தெய்வாம்சம் பொருந்தியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் இருக்கும் வாக்குவன்மை மிகவும் உன்னதமானது. கொடுத்த வாக்கை கொடுத்தபடி எப்படியாவது அரும்பாடுபட்டு காப்பாற்றி விடுவார்கள். இவர்கள் சொல்லும் சில விஷயங்கள் அப்படியே பலிக்கும். தோற்றத்திலும், குணத்திலும் மேன்மை கொண்டவர்களாக இருக்கும் தனுசு ராசி பெண்கள் எதையும் எளிதில் நம்பி விடுவது இல்லை. புத்திக் கூர்மையுள்ள இவர்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதிலும் வல்லவர்கள்.

மீனம்:
meenam
மீன ராசியில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் தெய்வ அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை பார்ப்பவர்களுக்கு பல சமயங்களில் அப்படியான ஒரு உணர்வு ஏற்படும். பிறந்தது முதலே தெய்வ கடாட்சம் நிரம்பிய முக லட்சணம் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் முகராசி மட்டுமல்ல, கை ராசியிலும் குறைந்தவர்கள் இல்லை. இவர்கள் கை தொட்டு எடுத்துக் கொடுக்கும் எந்த ஒரு விஷயமும் நல்லபடியாக நடக்கும். இயற்கையிலேயே தெய்வாம்சம் கொண்ட இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். தனக்கு அனைவரும் வேண்டும் என்று அனைவரையும் நேசிக்கும் இனிமையானவர்களாகவும் இருப்பார்கள்.