ஆவிகளோடு பேசும் MBBS டாக்டர் – வீடியோ

aavi doctor

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
ஆவிகளை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். மனித உடலை விட்டு பிரிந்து சென்ற ஆத்மாக்களிடம் சில மீடியம்கள் மூலம் பலர் பேச முயற்சிப்பது வழக்கம். அப்படி தான் மெத்த படித்த டாக்டர் ஒருவர் சில நவீன கருவிகளின் உதவியோடு ஆவிகளிடம் பேசி வருகிறார். அதோடு மட்டும் அல்லாமல் மற்றவர்களையும் பேச வைக்கிறார். அதுகுறித்த வீடியோ கீழே உள்ளது.

சாதாரணமாக ஒருவர் ஆவிகளிடம் பேச முயற்சிப்பது முற்றிலும் தவறு. ஆவிகளிடம் பேசுவதற்கு சில முக்கிய பயிற்சிகள் உள்ளன. அதை எல்லாம் தகுந்த குருவிடம் பயின்று அதன் பிறகு ஆவிகளிடம் பேச முயற்சிப்பதே சரி. ஆவிகளுடன் அனைவராலும் பேச முடியும். ஆனால் அதற்கு தகுந்தாற்போல உடல் ரீதியாகவும் மன ரீதியாக முதலில் பக்குவப்பட வேண்டும்.

ஆவிகளிடம் பேச நினைப்பவர்கள் முதலில் தியானம் மூலம் மனதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். நீண்ட கால தியானம் நமக்கு பிரம்மச்சரிய ஒழுக்கத்தை கற்றுத்தரும். அதன் பிறகு நாம் கற்க வேண்டிய மந்திரங்கள் குறித்த புரிதல் பிறக்கும். அந்த சமயங்களில் ஆவிகளோடு பேசும் மந்திர சக்தியை நாம் பெறுவதே சிறந்தது.

நவீன காலத்தில் பலர் மிக எளிதான தொழில் நுட்ப உதவியோடு ஆவிகளிடம் பேசுகின்றனர். ஆனால் அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. நினைத்த உடன் ஆவிகளிடம் பேச முடிவதில்லை. சில நேரங்களில் சம்மந்தமே இல்லாதே ஆவிகளிடம் பேசுவது போன்ற சிக்கல்கள் உள்ளன. இதற்கெல்லாம் தீர்வு முறையான தியானமே.

ஆவிகளோடு பேச நினைக்கும் ஒருவர், முதலில் மனித குளத்தில், தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். அப்படி அறிந்திருந்தால் மட்டுமே தான் அடுத்து என்ன செய்தால் அடுத்த நிலைக்கு செல்ல முடியும் என்பதை அறிய முடியும். இதை எல்லாம் தெளிவாக அறிய ஒரு சிறப்பான குரு தேவை. நமக்கனா குருவையும் நாம் தியானம் மூலம் அறியலாம். ஆகையால் அனைத்திற்கும் தியானமே ஒரே தீர்வாக இருக்கிறது.

English overview:
In this article there is one video attached in which one doctor speaking with some external power. There there many books by which we can learn how to speak with external power(aavigaludan pesuvadhu eppadi). But thiyanam is the best way to learn how to speak with external power(aavi).