பாம்பிடம் பலமணிநேரம் போராட்டம் நடத்தி, ‘கோமா’ நிலைக்கு சென்ற நாய். சோகத்தில் மூழ்கிய எஜமானர்.

dog
- Advertisement -

நாய்கள் என்றாலே நன்றி உள்ள செல்லப்பிராணி. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. யாராவது ஒருவர், நம் வீட்டில் வெறும் சாப்பாடு மட்டும் சாப்பிட்டுவிட்டு நன்றியோடு நமக்கு உதவியாக இருந்தால் அவர்களை பார்த்து ‘நன்றியுள்ள நாய் போல்’ நடந்து கொள்கிறான் என்று சொல்லுவோம். அதாவது மனிதர்களின் நன்றி உணர்ச்சியை விட, நாய்க்கு விசுவாசம் அதிகம் என்றுதான் இதற்கு அர்த்தம். வாலை ஆட்டிக்கொண்டு நம் பின்னாலேயே திரியும் அல்லவா! இப்படிப்பட்ட குணாதிசயங்களை உடைய இந்த நாய்கள், தன்னை வளர்க்கும் எஜமானரின் குடும்பத்திற்கு ஒரு ஆபத்து என்றால், தன்னுடைய உயிரையே தியாகம் செய்யும் அளவிற்கு கூட செல்லும். நம்ப முடியவில்லையா? இப்படிப்பட்ட ஒரு சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. தன்னை வளர்த்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, ஒரு பாம்பிடம் பலமணிநேரம் போராட்டம் நடத்தி தன் உயிரையே பணையம் வைத்து, தன் எஜமானர் குடும்பத்தையே காப்பாற்றியிருக்கிறது இந்த நாய்! இறுதியில் அந்த நாய்க்கு ஏற்பட்ட விபரீத முடிவு தான் என்ன? இதைப்பற்றிய விரிவான செய்தியினை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

dog1

மதுரையைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் நேற்றைய முன்தினம் நடந்த சோக சம்பவம் தான் இது. ராஜா என்பவரது வீட்டில் ‘புல்லி குட்டா’ என்ற நாயினை செல்லமாக வளர்த்து வந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக யாரும் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இந்த சமயத்தில் பொழுதை கழிக்க, ராஜாவும், ராஜாவின் குடும்ப உறுப்பினர்களும், நேற்றைய முன்தினம் நாயுடன் நீண்ட நேரம் விளையாடிவிட்டு, இரவு தூங்குவதற்காக வீட்டிற்குள் சென்று விட்டனர். எப்பவும் போல் நாய் வீட்டிற்கு வெளியில் காவலாக இருந்துள்ளது.

- Advertisement -

அன்றைய தினம் நள்ளிரவில், ராஜாவின் வீட்டிற்குள் மூன்று அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு நுழைவதை நாய் பார்த்து விட்டது. அந்தப் பாம்பு வீட்டிற்குள் நுழையாமல் தடுப்பதற்கு சத்தம்போட்டு குறைத்து துரத்துவதற்கு முயற்சி செய்துள்ளது. ஆனால் பாம்பு தொடர்ந்து வீட்டிற்குள் நுழைவதுலேயே குறியாக இருந்ததால், அந்தப் பாம்பை வீட்டிற்குள் செல்ல விடாமல் தடுக்க, பாம்பிற்கும் அந்த நாய்க்கும் இடையே நீண்ட நேரம் போராட்டமே நடந்துள்ளது.

dog

இறுதியாக நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு அந்த நாய் பாம்பை கடித்து கொன்று விட்டது. பாவம் நாயும் மயங்கி கீழே விழுந்திருக்கிறது. காலையில் ராஜாவின் குடும்பத்தினர் பார்க்கும்போது அந்த நாய் மயக்கத்திலும், அதன் அருகில் இவ்வளவு பெரிய பாம்பு இறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

- Advertisement -

உடனடியாக நாயை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனர். ஆனால், அந்த நாய்க்கு அதற்குள் பாம்பு கடித்த விஷமானது தலைக்கு ஏறி கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டதாக கால்நடை மருத்துவர் தெரிவித்தார். பாம்பிற்கும் நாய்க்கும் இடையே நடந்த போராட்டத்தில் அந்தப் பாம்பு நாயினை தொடைப் பகுதி, கால்ல பகுதி, வாய் பகுதி என்று சரமாரியாக கடித்துள்ளது. பாம்பு கடிப்பதன் மூலம் நாயின் முகமும் வீக்கம் அடைந்திருப்பதாக அந்த மருத்துவர் தெரிவித்தார்.

dog

அதுமட்டுமல்லாமல் பாம்பு கடித்து விஷம் தலைக்கு ஏறிய காரணத்தினால், அந்த நாய்க்கு மூச்சுவிடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், மூச்சுத்திணறலை சரி செய்ய மனிதர்களுக்கு வைக்கப்படும்  செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டால், நாயின் உயிரை காப்பாற்ற ஒரு வாய்ப்பு உள்ளது என்றும், ஆனால் நாய்க்கு செயற்கை சுவாசம் கொடுப்பது என்பது சற்று கடினமான விஷயம் என்பதால், ஊசியின் மூலம் மருந்தை உடலில் செலுத்தி இருப்பதாகவும், நாயின் உயர் காப்பாற்றுவதில் பல சிக்கல் உள்ளதாகவும் அந்த டாக்டர் தெரிவித்துள்ளார்.

இந்த ‘புல்லி குட்டா’ இனத்தைச் சேர்ந்த நாய்கள் வீட்டை காவல் காப்பதில் மட்டும் கெட்டிக்கார நாய்கள் அல்ல. நம்முடைய நாட்டின் எல்லையிலும் இந்த நாய்கள், எல்லை பாதுகாப்பிற்காக வளர்க்கப் படுகிறது என்பதை அந்த நாய்க்கு சிகிச்சை அளித்த டாக்டர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

dog

தனக்கு சாப்பாடு போட்டு வளர்த்த ஒரே காரணத்திற்காக இத்தனை விசுவாசம் கொண்ட இந்த நாயின் சோக கதையை கேட்கும்போது நம் மனம் கலங்கத்தான் செய்கிறது. தன்னுடைய உயிரை கூட துச்சமாக நினைத்து, தன் எஜமானரின் குடும்பத்தையே, காப்பாற்றிய இந்த நாயை பார்த்து அந்த ஊர் மக்களும், அந்த நாயின் உரிமையாளரும் ஆச்சரியத்துடன் சேர்ந்த சோகத்தில் மூழ்கிவிட்டனர். இறைவனின் படைப்பில் எத்தனை ஆச்சரியங்கள்! இந்த சம்பவத்தை கேட்கும்போது உடல் சற்று சிலர்க்கத்தான் செய்கிறது.

- Advertisement -