ஒரு ரூபாய் தானம் செய்தால் ஒரு கோடி பெறலாம். எப்படி தெரியுமா

perumal

இன்றைய தலைமுறையை சார்ந்த பலரின் எண்ணம் என்னவென்றால் எதையும் எளிதில் அடைந்துவிட வேண்டும் என்பதே. அனால் இறை அருளை பெறுவதென்பது அத்தகைய எளிதான விடயம் இல்லை. அனால் இல்லாதவர்களுக்கு தானம் செய்வதின் மூலம் இறை அருளை கூட எளிதில் பெறலாம். ஒரு ரூபாய் தானம் செய்து ஒரு கோடி ரூபாய் பெறுவதெப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

வைகாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு வரூதிநி ஏகாதசி என்று பெயர். அந்த நாளில் காலையில் எழுது குளித்துவிட்டு பெருமாள் கோவிலிற்கு சென்று துளசி அர்ச்சனை செய்வது பல நன்மைகளை  தரும்.

அதோடு அன்றைய தினத்தில் பணத்திற்காக கஷ்டப்படும் எழமானவர்களின் கல்விக்கு உதவும்படியாக ஒரு ருபாய் தானம் செய்தாலும் அது பல கோடிகளாய் நமக்கு திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதே போல் வைகாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்று பெயர். அன்று காலை எழுந்ததும் குளித்துவிட்டு பெருமாள் கோவிலிற்கு சென்று வழிபட்டால் பாவம் நீங்கி புண்ணியம் பெருகும்.

அதோடு புத்தி கூர்மையடையும். இந்த மாபெரும் ரகசியத்தை ராமபிரான் அவரது குல குருவான வசிஷ்டரிடம் கேட்டறிந்ததாக புராணம் கூறுகிறது.