வீட்டில் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் முட்டை ஓட்டில் இவ்வளவு விஷயங்கள் செய்ய முடியுமா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

egg-shell-mixie-jar

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் முட்டையை உடைக்கும் பொழுது பயன்படுத்தி விட்டு அதன் ஓட்டை வீணாகக் குப்பையில் தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் அதை வைத்து எவ்வளவோ விஷயங்களை நம் வீட்டு பயன்பாடுகளுக்கு நம்மால் செய்து கொள்ள முடியும் தெரியுமா? முட்டை ஓட்டில் இருக்கும் கால்சியம் சத்து நம் செடி வகைகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை வாரி வழங்குகிறது என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான். அதை வைத்து வேறு சில வீட்டு உபயோகத்திற்கும் நாம் எப்படிப் பயன்படுத்தலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

egg-white

நீங்கள் பயன்படுத்தி விட்டு முட்டை ஓடுகளை நன்கு தண்ணீரில் கழுவி காய வைத்து தனியாக ஒரு பாலிதீன் பையில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த முட்டை ஓடு கொஞ்சம் சேர்ந்தவுடன் அவற்றை நீங்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். முதலாவதாக நம் வீட்டில் பயன்படுத்தும் கத்தரிக்கோல் கூர்மையாக இல்லாமல் மழுங்கிப் போய் இருக்கும் அல்லவா? இந்த முட்டை ஓடுகளை அந்த கத்தரிக்கோல் கொண்டு சிறிது சிறிதாக கத்தரித்து வந்தால் கத்தரிக்கோல் கூர்மையடையும்.

நீங்கள் கத்தரித்து வைத்த முட்டை ஓட்டு துண்டுகளை மழுங்கி போன மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் மிக்ஸி ஜாரினுடைய பிளேடு கூர்மையடைந்து புத்தம் புதியதாக மாறும். சில சமயங்களில் நாம் தேங்காய் சட்னி அல்லது தேங்காய் சார்ந்த ஏதாவது ஒன்றை அரைக்கும் போது தேங்காய் முழுமையாக அறையாமல் போய்விடும். ஆங்காங்கே துண்டுகளாக கிடக்கும். இது போன்ற மிக்ஸி ஜார் பிரச்சினைகளை இந்த முட்டை ஓட்டின் துண்டுகளை கொண்டு எளிதாக நீக்கி விடலாம்.

egg-shell

நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்க நீங்கள் அரைத்து வைத்த இந்த பவுடரை ஒரு கால் டீஸ்பூன் அளவிற்கு சாப்பிடும் உணவில் கலந்து கொடுக்கலாம். சிறிய சிறிய அளவிலான தாவரங்களை முட்டையின் மேல் ஓட்டை மட்டும் உடைத்து உள்ளே மண் நிரப்பி அதில் வளர்த்து வந்தால் எளிதாக மக்கி உரமாக மாறிவிடும் அதை அப்படியே மண்ணில் புதைத்து விடலாம்.

- Advertisement -

இந்த முட்டை ஓட்டு கலவையை பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி சருமம் மென்மையாக மாறும். பொலிவான ஒரு தோற்றம் நமக்கு கிடைக்கும். சருமத்தில் இருக்கும் அயர்ச்சி நீங்கி புத்துணர்வு பெறும். வீட்டில் புதிதாக வாங்கிய ரோஜா செடி அல்லது பூ பூக்கும் தாவரங்களுக்கு தேவையான ஊட்டச் சத்து மற்றும் கால்சியம் சத்து கிடைப்பதற்கு இந்த முட்டை ஓட்டினை வேர் பகுதிகளில் படுமாறு கலந்து விடலாம். கொஞ்ச நாளிலேயே உரமாக மாறி மண்ணிற்கு நல்ல வளத்தைக் கொடுக்கும். மண் வளம் சிறக்க முட்டையோடு பகுதியை குப்பையில் தூக்கி எறியாமல் மண் தொட்டியில் எரிவது நல்லது தானே!

egg-shell-powder

முட்டை ஓட்டில் இருக்கும் கால்சியம் சத்தானது தினமும் அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தாலே மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் கால்சியம் சத்தில் 90 சதவீதத்தை அடைந்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் முட்டை ஓட்டில் இருக்கும் சத்துக்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொழுப்பின் அளவை கணிசமாக குறைக்கக் கூடிய ஆற்றலும் கொண்டுள்ளது. இதை நாம் பயன்படுத்தா விட்டாலும் நம் வீட்டு உபயோகத்திற்கும், தோட்ட உபயோகத்திற்கும் பயன்படுத்துவது என்பது மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே
இந்த 1 பொருளை 10 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் செடிகளுக்கு ஒரே ஒரு ஸ்பூன் வைத்தால் கூட ஒரே கிளையில் 20 மொட்டுக்கள் கூட துளிர்க்கும்!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.