கீழே கிடந்த பணத்தை எடுப்பது அதிர்ஷ்டமா? துரதிஷ்டமா? இதனால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?

finding-money
- Advertisement -

கீழே கிடந்த பணத்தை அல்லது நாணயங்களை எடுப்பது நமக்கு அதிர்ஷ்டத்தை தருமா? அல்லது துரதிர்ஷ்டத்தை தருமா? இது பல பேருடைய மனதில் பல காலமாக கேள்வியாக இருக்கும். இந்த விஷயத்தை நானும் நீங்களும் மட்டுமல்ல.. இங்கிருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனியாக வாழ்க்கையில் ஒரு முறையாவது அனுபவித்திருப்போம். முதல் கேள்வியாக எடுக்கலாமா? வேண்டாமா? என்று தோன்றியிருக்கும். இரண்டாவது கேள்வியாக எடுத்தால் ஏதாவது கெட்டது நடந்து விடுமோ? என்ற பயமும் இருக்கும். அதையும் தாண்டி நாம் அதை எடுத்து விடுவோம். அது வேறு விஷயம் என்று வைத்துக் கொள்வோம். இது போல அந்த பணத்தை எடுப்பதில் நமக்கு என்னவெல்லாம் நடக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

finding-money1

நாம் சிறு வயதாக இருக்கும் பொழுதே நமக்கு அடுத்தவருடைய பணத்தை எடுப்பதில் சிறிது தயக்கம் இருந்திருக்க செய்யும். அதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை முறையும், நம்முடைய வளர்ப்பு முறையும் அப்படியான ஒன்றாக இருக்கிறது. அடுத்தவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த பணத்தை சம்பாதித்து இருப்பார்கள்? அதை நாம் எடுத்துக் கொள்வதால் அவர்கள் நமக்கு என்னவெல்லாம் சாபம் விட்டிருப்பார்கள்? என்கிற பயம் தான் மேலோங்கி இருக்கும். ஏனென்றால் நாம் ஒவ்வொரு ரூபாயும் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் என்பது நமக்கு தெரியும். அதே போல் தான் மற்றவர்களும் என்கிற எண்ணம் இயல்பாகவே நமக்கு வந்துவிடும்.

- Advertisement -

இது போன்று கீழே கிடக்கும் பணம் அல்லது நாணயம் நீங்கள் கண்டெடுத்தால் அதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் வரும். என்னங்க கேட்பதற்கு ஆச்சரியமா இருக்கா? ஆமாம் நமக்கு அதிர்ஷ்டமான நேரத்தில் தான் இது போன்று மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் நாணயங்கள் பூமாதேவியின் மூலமாக கிடைக்குமாம். பணம், நாணயம் போன்றவற்றிற்கு எந்த தீட்டும் கிடையாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. உங்களுக்கு இதுபோல் பணம் அல்லது நாணயம் கிடைத்தால் அதை எடுப்பதற்கு எந்த தயக்கமும் நீங்கள் காட்ட வேண்டிய அவசியமில்லை. அதற்காக கத்தை கத்தையாக கிடைக்கும் பொழுது நீங்கள் எடுத்து வந்து விட்டால் அப்புறம் ஜெயில் கம்பி தான் எண்ண வேண்டியிருக்கும். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

finding-money2

இந்த அதிர்ஷ்டம் எதார்த்தமாக யாருடையது என்று தெரியாத சூழ்நிலையில் உங்களுக்கு கிடைத்தால் மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமக்கு அது யாருடையது என்று தெரியாமல் இருந்தாலும் ஒருபுறம் பயமாகவே இருக்கும். அது நாம் உழைத்த பணம் அல்ல எனும்போது அதை உபயோகப்படுத்தவும் நமக்கு மனம் வராது. அது ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி, 100 ரூபாயாக இருந்தாலும் சரி நமக்கு ஒரு மாதிரி உறுத்தலாகவே இருக்கும்.

- Advertisement -

அதனால் நாம் ஒரு நாணயத்தை அல்லது பணத்தை கீழே இருந்து எதார்த்தமாக எடுத்துக் கொள்கிறோம் என்றால் அது நமக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய ஒன்றாக இருந்தாலும் அந்த பணத்தை நாம் உபயோகப்படுத்தாமல் பத்திரமாக நீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு ரூபாய் கண்டெடுக்கிறீர்களோ அதே அளவிற்கு நீங்கள் சம்பாதித்து உழைத்த பணத்தில் இருந்து எடுத்து கோவில் உண்டியலில் சேர்த்து விடவும். இதனால் உங்களுக்கு மன உளைச்சல் இருக்காது.

finding-money3

நீங்கள் ஒரு ரூபாய் எடுக்கிறீர்கள் என்றால் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை பத்திரமாக வைத்துக் கொண்டு உங்களிடம் இருக்கும் வேறு ஒரு ரூபாயை கோவில் உண்டியலில் போட்டு விடுங்கள். ரூபாய் நோட்டுகளையும் இதே போல் செய்யுங்கள். அதற்காக 500 ரூபாய் கிடைக்கும்! 500 ரூபாயையும் கோயில் உண்டியலில் போட வேண்டுமா? என்று கேட்டால், ஆமாம் போட்டு விடுங்கள் என்று தான் கூற வேண்டியிருக்கும். கோவில் உண்டியலில் போடுவதால் உங்களுக்கு புண்ணியம் தான் கிடைக்கும். கீழே கிடைத்த நாணயம் அல்லது பணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்பதால் அதை கோவில் உண்டியலில் போடாமல் உங்கள் பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக உங்கள் பணத்தை கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள் அவ்வளவு தான். இது போல் நீங்கள் செய்தால் உங்களுக்கு அதை விட பல மடங்கு பணம் கிடைக்கும் என்பார்கள் அது தானே உண்மையான அதிர்ஷ்டம்?

இதையும் படிக்கலாமே
வெறும் பாயை போட்டு வைத்தால் வரும் ஆபத்துக்கள் என்னவென்று நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -