கானா நாட்டில் இந்து மதத்தை வளர்த்த கானாந்த சரஸ்வதி பற்றி தெரியுமா?

africa-hindu-temple-compressed
- Advertisement -

உலகின் ஒரு சில மதங்கள் வழிகளில் தங்களின் மத கொள்கைகளை பெரும்பாலான மக்கள் மீது திணித்தன. இதில் ஒரு சில நாட்டில் பூர்வீகமாக இருந்த கலாச்சாரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் அழிந்து போயிருக்கின்றன. ஆனால் உலகின் மூத்த மதமான இந்து மதமோ, மனித வாழ்க்கைக்கு ஒத்துப்போகும் கொள்கைகள் அதிகம் கொண்டிருப்பதால் உலகின் பிற பகுதிகளில் பிறந்த மக்களும் அதனால் ஈர்க்கப்படுகின்றனர். அந்த வகையில் பிறப்பால் ஆப்பிரிக்கரான ஒருவர் இந்து மத துறவியாகி, அவர் செய்த சேவைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

“கானா” என்பது ஆப்பிரிக்க கண்டத்தில் மேற்கு பகுதியில் இருக்கும் ஒரு சிறிய நாடாகும். இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்த இந்த நாட்டை பல நூற்றாண்டுகளாக பல ஐரோப்பிய நாடுகள் வளங்களை வளங்களை சுரண்டியது. அக்காலத்தில் இங்கிருக்கும் மக்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்களால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டனர். ஆங்கிலேயர்களின் காலனி நாடாக இருந்த கானா கடந்த 1957 ஆண்டு சுதந்திரம் பெற்றது.

- Advertisement -

இந்த கானா நாட்டில் பிறந்தவர் தான் தற்போது “கானானந்த சரஸ்வதி” என அழைக்கப்படும் நபர். பிறப்பால் ஆப்பிரிக்கராகவும், கிறிஸ்தவராக இருந்தாலும் சிறுவயதிலிருந்தே தனக்கு மதங்களை குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் இருந்ததாக கூறுகிறார். ஒரு முறை இந்து மத தத்துவங்கள் மற்றும் நூல்களை ஆழ்ந்து படித்த போது, அதிலிருந்து தனக்கு இந்து மதத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டதாவும், கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு வந்து ரிஷிகேஷம், ஹரித்துவாரம் போன்ற புனித நகரங்களுக்கு சென்று சில காலம் தங்கியிருந்ததாகவும் கூறுகிறார்.

ரிஷிகேஷம் நகரத்தில் தான் ஒரு இந்து துறவியின் சீடராக சில காலம் இருந்த போது, இந்து மத சாத்திரங்கள் மற்றும் சம்பிரதாயங்களை தான் முழுமையாக கற்று துறவறம் ஏற்ற போது, தனது இந்திய குரு தனக்கு கானானந்த சரஸ்வதி என்கிற பெயரை சூட்டி, தீக்சையளித்து ஆசீர்வதித்து கானா நாட்டிற்கு சென்று ஒரு கோயிலை அமைத்து அனைவருக்கும் சேவை செய்ய அருவுறுத்தியதாக கூறும் கானானந்த சரஸ்வதி கடந்த 1975 ஆம் ஆண்டு தற்போதிருக்கும் கோயிலை கட்டி அனைவருக்கும் சேவை செய்து வருவதாக கூறுகிறார்.

- Advertisement -

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் கானா நாட்டில் தான் முதன்முதலாக ஒரு இந்து கோயிலை கட்டிய போது முதலில் பலத்த எதிர்ப்புகளை சந்தித்ததாகவும். ஆனால் தற்போது இந்த நாட்டில் குறைந்த எண்ணிக்கையில் வசிக்கும் இந்துக்கள் மட்டுமின்றி மற்ற பல மதத்தவர்களும் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வதாகவும் கூறுகிறார் கானானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்.

இதையும் படிக்கலாமே:
உலகின் முதல் மனிதன் இந்தியாவில் தோன்றியதற்கான சான்று

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான கட்டுரைகள் படிக்க எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ghana hindu temple in Tamil. it is also called Africa hinduism in Tamil or Ghana hinduism in Tamil or Hindu temple africa in Tamil or Ghana nadu hindu koil in Tamil.

- Advertisement -