Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 30 விளம்பி

Gold
- Advertisement -

விளம்பி தமிழ் வருடத்தின் கடைசி தினமும், சனிக்கிழமையுமான இன்று (13-04-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,031.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,248.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,179.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,432.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை காட்டிலும் இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கம் விலை இரண்டு ருபாய் உயர்ந்துள்ளது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.30 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையிலேயே இன்றும் கிராம் வெள்ளி விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. நாளைய தினம் தமிழ் புத்தாண்டு பிறப்பதாலும், இம்மாதம் சுபமுகூர்த்த தினங்கள் தொடர்ந்து வரவிருப்பதாலும் தங்கம், வெள்ளி விலை உயர வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -