இன்று தங்கம், வெள்ளி விலை எவ்வளவு குறைந்துள்ளது – பங்குனி 1 விளம்பி

Gold
- Advertisement -

தங்கத்திற்கு எக்காலத்திலும் மதிப்பு உண்டு. தங்கம் என்பது வெறும் நகை, அணிகலன்கள் செய்வதற்கு மட்டுமல்லாமல் எதிர்காலத்திற்கான முதலீடாக பலரும் கருதுகின்றனர். தமிழ் மாதம் பங்குனி மாதத்தின் தொடக்க தினமான வெள்ளிக்கிழமையான இன்றைய (15-03-2019) நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம், கிராம் ஒன்றிற்கு 3,054.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,432.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,202.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,616.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்று தங்கத்தின் விலை இருபத்தி மூன்று ருபாய் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 41.00 ருபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 41,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இது நேற்றைய ஒரு கிராம் வெள்ளியின் விலையை காட்டிலும் 50 பைசா குறைவாகும். வெள்ளி விலையும் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

சர்வேதச சந்தைகளில் அன்றாடம் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம், வெள்ளி போன்றவற்றின் விலை சில தினங்களாக குறைந்து வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ள தற்சமயம் தங்கம்,வெள்ளி நகைகள் வாங்குபவர்களுக்கு சிறிதளவு லாபம் கிடைக்கும்.

- Advertisement -