உங்களுடைய முடியும் பார்லருக்கு போகாமல் நேராக இருக்க வேண்டுமா? U கட், V கட் எல்லாம் வீட்டிலேயே யார் உதவியும் இல்லாமல் நாமே எப்படி செய்து கொள்வது?

hair-cut2
- Advertisement -

எல்லா பெண்களுக்கும் முடியின் மீது மிகப்பெரிய மோகம் உண்டு. தங்களுடைய முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் அதே சமயத்தில் அழகான வடிவங்களிலும் இருப்பதை பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களால் தங்களுக்கு தாங்களே முடியை வெட்டிக் கொள்ள முடியாமல் சில சமயங்களில் தவிர்ப்பது உண்டு. பார்லருக்கு போகாமல், பத்து பைசா செலவில்லாமல், யாருடைய உதவியும் இல்லாமல் நமக்கு நாமே எப்படி விதவிதமான வடிவங்களில் ஹேர் கட்டிங் செய்து கொள்வது? என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

hair

ஹேர் கட்டிங் செய்வதற்கு முதலில் நமக்கு வரும் சந்தேகம் எண்ணெய் தேய்த்த பின் முடியை வெட்ட வேண்டுமா? அல்லது தலைக்கு குளித்து எண்ணெய் தேய்க்காமல் முடியை வெட்ட வேண்டுமா? என்பது தான். ஹேர் கட்டிங் செய்வதற்கு தலையில் கட்டாயம் எண்ணெய் இருக்க வேண்டும். தலைக்கு குளித்து முடித்த பின் தலை முடியை வெட்டுவது சீரான தோற்றத்தை எப்பொழுதும் கொடுக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

எப்போதும் போல தலைக்கு தேங்காய் எண்ணெயை நன்றாக தடவிக் கொள்ளுங்கள். ஒரு இடத்தில் கூட சிக்கு இல்லாமல் நன்கு தலை முடியை சீப்பால் வாரிவிடுங்கள். பிறகு காதோரங்களில் இருக்கும் முடியை காதுக்கு பின்னால் ஒதுக்கிவிடுங்கள். இப்போது எல்லா முடியும் ஒரே சீராக இருக்கும். இப்பொழுது கத்தரிக்கோலை எடுத்து நீங்கள் விரும்பும் வடிவத்தில் யாரையாவது வெட்டி விட சொல்ல வேண்டும். v வடிவ கட்டிங் என்றால் தலைமுடியை பிடிக்காமல் கத்தரிக்கோலை கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வலது புறத்திலிருந்து நடு புறம் வரை வெட்டிவிட வேண்டும். அதே போல இடது புறத்திலிருந்து நடு புறம் வரை வெட்டி விட வேண்டும். வெட்டும் பொழுது தலைமுடியை பிடிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

hair-cut

இதே போல் ஒரு முறை தான் யூ வடிவ கட்டிங்கிலும் செய்ய வேண்டும். தலைமுடியை பிடிக்காமல் நல்ல பெரிய கத்தரிக்கோலை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக யூ வடிவில் கத்தரிக்க வேண்டியது தான். இது மற்றவர்கள் தான் நமக்கு செய்ய முடியும். ஆனால் நமக்கு நாமே செய்து கொள்ள வேண்டுமென்றால் நேராக உச்சி முதல் பின்புறம் வரை வகிடு எடுத்துக் கொள்ளுங்கள். முடியை இரண்டு பக்கத்திலும் முன்புறம் விட்டுக் கொள்ளுங்கள். வலது புறத்தில் இருக்கும் முடியை நன்கு சீப்பைக் கொண்டு வாரிவிட்டு படத்தில் காட்டியுள்ளது போல் வெட்டி விடுங்கள். அதே போல இடது புறத்திலும் செய்தால் யூ கட் சுலபமாக வந்துவிடும்.

- Advertisement -

கீழே ஒரே சீராக நேராக வரும்படி கத்தரிக்க வேண்டுமென்றால் இந்த முறையில் கத்தரிக்க கூடாது. காதோரங்களில் இருக்கும் முடியையும் சேர்த்து மொத்தமாக ஒரு ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளுங்கள். அதற்கு கீழே இருக்கும் பகுதியிலும் கொஞ்சம் இடைவெளி விட்டுவிட்டு ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளுங்கள். இறுதியாக அடிப்பகுதியில் ஒரு ரப்பர் பேண்ட் போட்டு தேவையான அளவிற்கு முடியை வெட்டிக் கொள்ளலாம். இப்படி செய்யும் பொழுது ஒரே சீராக நேரான வடிவத்தில் நமக்கு ஹேர் கட்டிங் செய்ய முடியும்.

hair-cut1

இப்படி செய்தாலும் சரியாக வரவில்லை என்றால் பின்னால் இருக்கும் மொத்த முடியையும் முன்புறமாக போட்டு நன்கு வாரி ரப்பர் பேண்ட் போட்டு கொள்ளுங்கள். அதே போல இடையிடையே ரப்பர் பேண்ட் போட்டு இறுதியாக இருக்கும் நுனி முடியிலும் ஒரு சிறு ரப்பர் பேண்ட் போட்டு அழகாக வெட்டி கொள்ளலாம். இப்படி செய்யும் பொழுது யாருடைய உதவியும் இன்றி நமக்கு நாமே நம்முடைய முடியை நமக்கு தேவையான வடிவங்களில் அழகாக வெட்டிக் கொள்ளலாம். V கட் செய்ய வேண்டும் என்றாலும் இதே முறையில் நேராக கருத்தரிக்காமல் v வடிவத்தில் கத்தரித்து விட்டால் V வடிவம் சுலபமாகக் கிடைத்துவிடும்.

- Advertisement -