அனுமானால் தூக்கி வீசப்பட்ட இலங்கை அம்மனின் சிறப்புக்கள்

anuman-amman

அருள்மிகு இலங்கை அழியா அம்மன் திருக்கோயில் தமிழகத்தின் நாமக்கலில் கூனவேலம்பட்டி புதூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

இக்கோவிலின் சிறப்பம்சமே கருவறை புற்று வடிவில் அமைந்துள்ளது தான்.

சிறப்பம்சம்

ஐந்து ஏக்கர் பரப்பளவில் அழியா இலங்கை அம்மன் கோவில் நாற்புரமும் மதில் சுவர் எழுப்பப்பட்டு, மூன்று வாயில்களுடன் அதி அற்புதமாகத் திகழ்கிறது.

கருவறை புற்று வடிவில் அமைந்துள்ளதால், இப்புற்றில் தலைகீழாக வடக்கு நோக்கி நிற்கும்போது இரண்டு பாதங்களும் மேல்நோக்கி அமைந்துள்ளன. திருவிழா சமயங்களில் மட்டும் இப்பாதத்தின்மீது உருவச்சிலை ஒன்று வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

தல வரலாறு

- Advertisement -

சீதையைத் தேடி அனுமன் இலங்கை சென்ற சமயம், வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற இலங்கை அம்மன் தடுத்தாள். அனுமன் தன் வாலினால் இலங்கை அம்மனைக் கட்டி சுருட்டி வீசப்பட்ட அம்மன், கூனவேலம்பட்டி புதூரில் வந்து தலைகீழாக விழுந்ததால் இங்கு இந்த அம்மனின் பாதங்களை வழிபடுகின்றார்கள்.

இலங்கை அழிவதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்ததால், அழியா இலங்கை அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். அம்மனுக்குரிய சிலை, சிவனும் பார்வதியும் இணைந்து அழகிய லிங்க வடிவில் அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் புல்லும் புதருமாக கிடந்த இடத்தில் இருந்த புற்றில், மேய்ச்சலுக்கு வந்த ஒரு மாடு மட்டும் இங்கு வந்து பாலைச் கொடுத்து விட்டு சென்றாதாம்.

மாடு சரியாக பால் கரக்காததை சந்தேகப்பட்டு மாட்டுகாரர், மாட்டை பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது விஷயத்தை அறிந்து கொண்டார். அவர் கனவில் அம்மன் வந்து தன்னுடைய வரலாற்றை கூற, அந்த இடத்தில் பந்தல் போடப்பட்டு தொடங்கிய வழிபாடினை மக்கள் வழிவழியாக வளர்ந்து கொண்டுவந்தனர்.

தலபெருமை

இத்தலத்தில் அம்மன், விநாயகர், முனியப்பன், பசு, நந்தி, நாகம் போன்ற துணை தெய்வங்களாக எழுந்தருளியிருக்கின்றார்கள்.

இக்கோயிலில் தனிக்கட்டடம் ஒன்றில் அழியா அம்மனின் குழந்தைகள் என அழைக்கப்படும் 27 குழந்தைகள் உருவங்களாக அமைக்கப்பட்டுள்ளனர். இவர்களை 27 நட்சத்திரமாக மக்கள் வழிபட்டு வருகின்றார்கள்.

தலவிருட்சம் மற்றும் தீர்த்தம்

தல விருட்சம் வேம்பு மரமாகும், தலத்தின் தீர்த்தம் காவிரி என்றும் இங்கு ஆகமம் பூஜைகள் அதர்வண வேதம் சார்ந்து நடைபெறும் என்று கூறப்படுகின்றது.

திருவிழாக்கள்

இலங்கை அம்மனுக்கான திருவிழா ஆண்டுதோறும் தீபாவாளிப் பண்டிகையை அடுத்து வரும் திங்கட் கிழமையன்று காய்வெட்டி போடுதல் என்ற நிகழ்வுடன் தொடங்கி திருக்கோடி ஏற்றப்படும் நிகழ்வுடன் முடிடைகின்றது.

நேர்த்திக்கடன்களும் பிராத்தனைகளும்

மக்கள் நேர்த்திக்கடனாக நாய் மற்றும் பாம்பு உருவத்தினை செலுத்துகின்றனர், நோய்கள் நெருங்காமல் இருக்க சிறிய பசு உருவங்களை மண்ணால் செய்து காணிக்கையாக சமர்பிக்கிறார்கள்.