நினைத்த காரியத்தை உடனே நிறைவேற்ற 9 வெற்றிலையும், 9 நாட்களும் போதுமே!

hanuman-vetrilai

நம்முடைய வேண்டுதல்கள் உடனடியாக பலிக்க வேண்டும் என்றால், அதற்கான சிறப்பான பரிகாரங்கள் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறாமல் உள்ளதா? இறைவனை நினைத்து இந்த வழிபாட்டை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலனை பெற முடியும். உங்களுடைய வேண்டுதல் நியாயமான வேண்டுதலாக இருக்க வேண்டும். வைக்கும் கோரிக்கை உங்களுக்கு தகுந்த கோரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது, சாதாரணமாக நீங்கள் மிடில் கிளாஸ் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள். படிப்படியான முன்னேற்றத்தை எதிர்பார்த்து வேண்டுதல் வைப்பது சரியான முறை.

panjamuga anjaneyar

இப்படி அல்லாமல், எடுத்த எடுப்பிலேயே உங்களுக்கு கோடி ரூபாய் கிடைக்க வேண்டுமென்றால் நாம் இந்த பரிகாரத்தை பிரயோகப்படுத்தி பார்க்கக்கூடாது. நிச்சயம் பலிக்காது. நியாயமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில், அதற்காக விண்ணப்பத்தை இறைவனிடம் நீங்கள் போடப் போகிறீர்கள் அவ்வளவுதான்.

இந்த பரிகாரத்தை அனுமனை வேண்டித்தான் செய்யப்போகின்றோம். வெற்றிக்கு உரியதான பொருள் வெற்றிலை. இந்த வெற்றிலையும் பரிகாரத்திற்கு மிக மிக அவசியம். இந்தப் பரிகாரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது உடனடி பலனை கொடுக்கும்.

vetrilai

பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய முடியாதவர்கள், அதாவது காலை 4.00 மணியிலிருந்து 5.00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் கூட, காலை 5.00 மணியில் இருந்து 6.45 க்குள் சூரிய உதயம் ஆவதற்கு முன்பாகவே செய்து முடித்து விடுங்கள். பூஜைக்கு, முன்பு உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து வைத்து, நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பின்பு ஒரு தாம்பூலத் தட்டை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்தத் தட்டில் காம்பும் முனையும் உடையாத 9 வெற்றிலைகளை அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும், அந்த வெற்றிலையில் மோதிரவிரலில் எழுத வேண்டும். எதையும் தொட்டு எழுத வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நீங்கள் எழுதும் எழுத்து கண்களுக்கு தெரிய போவது கிடையாது. ஆனால், கடவுளுக்கு தெரியும். வெறும் மோதிர விரல்களால் அந்த வெற்றிலையின் மேல் கோரிக்கையை எழுதுங்கள் போதும்.

vetrilai

எடுத்துக்காட்டிற்கு கடன் தீர வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும். சேமிப்பு உயரவேண்டும். திருமணம் நடக்கவேண்டும். குழந்தை பேறு கிடைக்க வேண்டும். என்றவாறு ஏதாவது ஒரு கோரிக்கை தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றியிலும் ஒருமுறை எழுதினால் போதும். 9 வெற்றிலைகளில், மொத்தமாக 9 முறை எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

hanuman-sivan

இந்த ஒன்பது வெற்றிலைகளை எழுதி முடித்துவிட்டு, 9 வெற்றிகளையும் சுருட்டி மாலையாக கட்டி, முடிந்தால் இந்த மாலையை ஆஞ்சநேயருக்கு அணிவிக்கலாம். முடியாதவர்கள் அன்று இரவு பூஜை அறையிலேயே வைத்து விட்டு, ஹனுமனை நினைத்து நன்றாக பிரார்த்தனை செய்து கொண்டு, மறுநாள் ஏதாவது கோவில்களில் மரத்தில் கொண்டுபோய் இந்த மாலையை மாட்டிவிட்டு வந்துவிடுங்கள்.

vetrilai-malai-hanuman

9 நாட்களுக்கும், 9 புதிய வெற்றிகளைகளை நீங்கள் வாங்க வேண்டும். முந்தைய நாள் எழுதிய வெற்றிலையில் அடுத்த நாள் எழுதக்கூடாது. 9 நாட்கள் இதே போல் உங்களது கோரிக்கைகளை  வெற்றிலையில் நம்பிக்கையோடு எழுதி வரும் பட்சத்தில் நிச்சயம் உங்களது வேண்டுதல் நிறைவேறும் என்பதில் ஒரு துளி கூட சந்தேகம் இல்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.