மிக பழங்காலத்திலேயே தென் அமெரிக்காவில் இந்து மதம் இருந்ததா? விளக்குகிறார் பெரு நாட்டு தூதர்

peru-1-compressed
- Advertisement -

உலகின் மிக பழமையான மதம் மற்றும் கலாச்சாரத்தை கொண்ட நாடு இந்திய நாடு. இந்த நாட்டின் இதிகாசங்கள், கதைகள், தத்துவங்கள் எல்லாமே பல நூற்றாண்டுகளாக உலகின் பிற பகுதிகளில் வாழும் மக்களிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கிறது. அப்படி தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் “பெரு” நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவின் மீது கொண்டிருக்கும் மிகுந்த மதிப்பும், அதன் புராணங்கள், தத்துவங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈடுபாடு பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் ஒரு நாடு பெரு. இந்த பெரு நாட்டிற்கான இந்திய தூதராக பணியாற்றியவர் திரு கார்லோஸ் இரியோகன் போனோ. பல நாடுகளில் தூதராக பணியாற்றியதால் பன்மொழி திறன் கொண்டவரான கார்லோஸ் சிறு வயது முதலே பல்வேறு நாடுகளை பற்றியும், அதன் பண்பாடுகளை பற்றியும் அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கடந்த 1967 ஆம் ஆண்டு தான் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தியாவின் இணையற்ற காவியமான “மகாபாரதம்” நூலை படித்த போது தன்னை அறியாமல் மகாபாரதத்தை எழுதிய வேத வியாசர் மீது மிகுந்த மரியாதையும், அவரை பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட போது, இந்திய தத்துவ நூல்கள்,வேதாந்தங்களை படிக்க நேர்ந்தது என்றும், அதிலும் குறிப்பாக அத்வைத தத்துவத்தை உலகிற்கு அளித்த ஆதிசங்கரர் மீது தனக்கு ஒரு தனி ஆர்வம் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்.

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்பு திரு. கார்லோஸ் அவர்கள் இந்தியாவிற்கான பெரு நாட்டின் தூதராக பணியாற்றிய போது, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்ட கார்லோஸ், காஞ்சி சங்கர மடம் நிர்வகிக்கும் சந்தரசேகர சரஸ்வதி மகாவித்யாலயாவில் ஆதி சங்கர் குறித்து ஆய்வு படிப்பை மேற்கொள்ள விண்ணப்பித்து, அதி சங்கரர் குறித்த ஆய்வை முடித்து முனைவர் பட்டமும் பெற்றுருக்கிறார்.

திரு கார்லோஸ் அவர்கள், தான் தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் வாழ்ந்த “இன்கா” பழங்குடியை சார்ந்தவன் என்றும் பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறார். தன்னுடைய இன்கா பழங்குடியின் கலாச்சாரத்திலும், இந்திய கலாச்சாரத்திலும் பல ஒற்றுமைகள் இருப்பதை தான் உணர்ந்ததாகவும், இந்துக்களை போலவே தங்கள் மூதாதையரான இன்கா பழங்குடியினரும் “சூரிய, சந்திர” வழிபாட்டை மேற்கொண்டதாகவும் கூறுகிறார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
ஜப்பான் நாட்டில் சரஸ்வதி வழிபாடு

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான கட்டுரை படிக்க எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Hinduism in peru in Tamil.

- Advertisement -