தேவர்கள் பூமிக்கு வந்த கல்வெட்டு ஆதாரம் சிக்கியது

turkey-indira-compressed

தற்போது இந்தியாவில் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் இந்து மதம் ஒரு காலத்தில் உலகம் எல்லாம் பின்பற்றப்பட்டு வந்தது என்கிற உண்மை பலரும் அறிந்து கொள்ளாதவாறு ஒரு சிலரால் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகின் மூத்த மதம் உலகெங்கிலும் பரவியிருந்ததற்கான ஆதாரம் அவ்வப்போது கிடைத்து வர தான் செய்கின்றன. அந்த வகையில் தற்போது இஸ்லாமிய நாடாக இருக்கும் துருக்கியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இந்து மதம் சார்நத விடயம் இருந்ததை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

தற்போது ஆசிய மற்றும் ஐரோப்பிய கண்டங்களை இணைக்கும் நாடாகவும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராகவும் இருக்கும் “துருக்கி” சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு “ஹிட்டைட்” சாம்ராஜ்யமாக இருந்தது. இந்த ஹிட்டைட் சாம்ராஜ்யத்திற்கு எகிப்து நாட்டை ஆட்சி புரிந்த பாரோஹ் மன்னர்களுடன் அடிக்கடி போர் ஏற்பட்டது. மற்றொரு பக்கம் “அஸ்ஸிரிய” நாட்டு மன்னர்களுடனும் போர் புரிந்து கொண்டிருந்தனர் ஹிட்டைட் நாட்டினர். ஹிட்டைட் மக்கள் சிவ மற்றும் வைணவ மத வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர் என்றும், அவர்கள் ஆட்சி கால கல்வெட்டுகள் பலவற்றில் சமஸ்கிருத மொழி சொற்கள் இருந்ததையும் வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

சுமார் 3370 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்டைட் நாட்டின் அரசனாக “முதலாம் சுப்பிலியுலிமா” இருந்தார். இவர் ஆட்சி புரியும் காலத்தில் அஸ்ஸிரிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நாடாக “மிட்டாணி” நாடு இருந்தது. இந்த மிட்டாணி நாட்டின் மன்னன் “ஷாட்டிவாஸா” என்பவனுடன் சுப்பிலியுலிமா அடிக்கடி போரிடும் நிலை உண்டானது. ஒரு கட்டத்தில் போரினால் சலித்து போன இரண்டு மன்னர்களும் சமாதானம் செய்து கொள்ள தீர்மானித்தனர்.

hittite inscription

ஹிட்டைட் மன்னர் முதலாம் சுப்பிலியுலிமாவும், மிட்டாணி அரசன் ஷாட்டிவாஸாவும் தாங்கள் வழிபடும் தெய்வங்களான “இந்திரன்” மற்றும் “வருண” பகவானை சாட்சியாக கொண்டு போர் புரியாமல் சமாதானம் செய்து கொள்வதை கல்வெட்டுகளில் சாசனமாக பொறித்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட மேற்குலக வரலாற்று ஆய்வாளர்கள் துருக்கி நாட்டின் “பொகோஸ்கொய்” என்கிற பகுதியில் இந்த கல்வெட்டை கண்டெடுத்தனர். இந்த கல்வெட்டு தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருக்கும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
உலகின் முதல் மனிதன் இந்தியாவில் தோன்றியதற்கான சான்று இதோ

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான கட்டுரைகள் படிக்க எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Hinduism in Turkey in Tamil.