எந்தெந்த கோவிலை எத்தனை முறை வளம் வருவது சிறந்தது.

kovil-valam-varuvadhu

பொதுவாக நாம் கோவிலுக்கு சென்றதும் இறைவனை வணங்கிவிட்டு பின்பு கோவிலை சுற்றி வருவது வழக்கம். ஒவ்வொருவரும் தங்களின் மனதிற்கு தோன்றியவாறு ஒரு சுற்று மூன்று சுற்று ஐந்து சுற்று என பலவிதமாக சுற்றி வருவது வழக்கம். அனால் இந்தஇந்த கோவிலை இத்தனை முறை சுற்றிவந்தால் நன்மை அதிகரிக்கும் என்று ஒரு வழிபாட்டு முறை இருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

சிவன் கோவிலை குறைந்தது 3 முறையாவது சுற்ற வேண்டும். அதற்கு மேல் 5, 7, 9 என்ற வரிசையில் எத்தனை முறை வேண்டுமானாலும் சுற்றலாம்.

விநாயகரை ஒரு முறை சுற்றினாலேயே போதும் அவர் பலவிதமான அருளை தருவார்.

அம்பாளை நான்குமுறை சுற்றுவது சிறந்தது.

முருகனை மூன்றுமுறை சுற்றுவது சிறந்தது.

விஷ்ணுவை நான்குமுறை சுற்றுவது சிறந்தது.

மேலே குறிபிடிபட்டுள்ள்ள தகவல்கள் வழிபாட்டு முறைகளில் கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக மூன்று முறையோ இல்லை 5,7, 9 என்ற வரிசையில் எத்தனை முறை வேண்டுமானாலும் வலம்வரலாம் அதில் பெரிதாக தவறொன்றும் இல்லை.