சனிபகவான் பிடியில் இருந்து எளிதில் விடுபடுவதற்கான ரகசியம்.

sanibagavaanl

சனிபகவானின் பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறீர்களா? சனிபகவானின் சோதனையை தாங்க முடியவில்லையா? கவலையை விடுங்கள்.

சனிபகவானின் மனதை குளிர்விக்க ஒரு அற்புத வழி இருக்கிறது. இதை செய்தால் நீங்கள் சனி பகவானை மட்டும் அல்ல உங்கள் முன்னோர்களையும், எம தர்ம ராஜனையும் கூட குளிவிக்கலாம். வாருங்கள் இதை பற்றி விரிவாக பார்ப்போம்.

தினமும் காலை, உலர்ந்ததிராட்சையை ஒரு கைப்பிடி எடுத்து அதை காகத்திற்கு அளிக்கவேண்டும். இப்படி செய்வதனால் உங்கள் வாழ்வில் உள்ள மிக பெரிய கஷ்டங்களும் சரியாகும்.

உலர்ந்ததிராட்சையை அளிக்க முடியாதவர்கள் எச்சில் படாத சாதத்தை காகத்திற்கு அளிக்கலாம். இப்படி செய்வதின் முலாம் உங்கள் மனதிற்கு இனம் புரியாத ஒரு சந்தோஷம் கிடைக்கும்.

- Advertisement -

அதோடு தீராத கடன் தொல்லைகள், வீண் பழி, அசம்பாவிதங்கள் போன்ற பிரச்சனைகள் தீரும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

காகங்களே நாம் முன்னோர்கள் என்று ஞானிகள் கூறுகிறார்கள். ஆகையால் சனிபகவானின் வாகனமான காகத்தை திருப்தி படுத்துவது சனிபகவானின் மனதை குளிர்விப்பதோடு மட்டும் அல்லாமல் நம் முன்னோர்களின் ஆத்மாவையும் குளிர்விக்க உதவுகிறது.

விநாயகரை சனிபகவானால் பிடிக்க முடியாது என்பது நாம் அறிந்ததே. ஆகையால் வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படைத்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்து எள் கலந்த தயிர்சாதம் படைத்தாலும், விநாயகரின் அருள் உங்களை கவசம் போல் காக்கும்.

சனிபகவானின் சகோதரரான எமதர்மராஜன் காக்கைவடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். ஆகையால் காக்கைக்கு உணவளித்தால் எமதர்ம ராஜனும் மகிழ்வாராம்.

இப்படி உங்களுக்கு பல பலன்களை அளிக்கவல்ல காகம் உங்கள் வீடு தேடி வந்து கரையும்போது அதற்கு உடனே உணவிட வேண்டும். அதோடு தினமும் காலையில் காகங்களை நீங்களே அழைத்து உணவளித்து பாருங்கள், சில நாட்களிலேயே உங்கள் வாழ்வில் மிக பெரிய நல்ல விடயங்கள் நடக்க ஆரமிக்கும்.

காகத்திற்கு உணவளிப்பது ஒரு பெரிய விடயமா என்று எண்ணி அலட்சியமாக இருக்க வேண்டாம். இதை தொடந்து செய்வது அவ்வளவு சுலபமல்ல. 100ல் 98 சதவீதம் பேரால் இதை செய்யவே முடியாது. நீங்களும் முயற்சித்து பாருங்கள். உங்களால் இதை தொடர்ந்து செய்ய முடிந்தால் நீங்கள் அதிஷ்டசாலிதான்.