வீட்டில் இருக்கும் இந்த பழைய பொருட்களை இப்படி வைக்காதீர்கள்! தரித்திரம் தான் தாண்டவமாடும்.

anda-attukal-lakshmi

நம்முடைய வீட்டில் நாம் ஒரு சில பொருட்களை பழையது என்று தள்ளி வைத்து இருப்போம். அல்லது அதனுடைய பயன்பாடு நமக்கு தேவைப்படாமல் போயிருக்கும் அதனால் மூலையில் போட்டு வைத்திருப்போம். புதியன வந்ததும் பழைய பொருட்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அப்படி நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களுக்கு தரித்திரத்தை ஏற்படுத்தும் ஆற்றல் உண்டாகிவிடும்! அப்படியான பொருட்களை எப்படி வைக்க வேண்டும்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

tailor-mechine

வீட்டில் இருக்கும் பழைய இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் துருப்பிடித்து இருக்கும் பொருட்கள் தரித்திரத்தை நிச்சயமாக உண்டாகும். இரும்புக்கு எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் சக்தி உண்டு. இரும்பு சனிபகவானுடைய அம்சமாக கருதப்படுவதால் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை தேவையில்லாமல் ஒதுக்குப்புறத்தில் வைத்திருப்பது அவ்வளவு நல்லது அல்ல. உதாரணத்திற்கு தையல் மெஷினை எடுத்துக் கொள்ளலாம்.

தையல் மிஷினில் இருக்கும் இரும்பு துருப்பிடிக்க துவங்கினால் எதிர்மறை ஆற்றல் கொடுக்கும். எனவே கூடுமானவரை உங்களுடைய பழைய தையல்மிஷினை தூசி படிய விட்டு திறந்தபடி வைத்திருக்காதீர்கள். அதுபோல தண்ணீர் பட்டு துருப்பிடிக்கும் படி வைத்திருக்கக் கூடாது. நன்கு துடைத்து சுத்தம் செய்து பெரிய துணி பெட்ஷீட் போன்ற ஏதாவது ஒன்றை போட்டு மூடி வைக்கவும்.

tailor-mechine1

உங்களால் தினமும் சுத்தம் செய்ய முடியும் என்றால் தினமும் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து விடுங்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்பது போல தையல் மெஷின் மூலம் வரும் வருமானம் கூட தொழில் தான். மேலும் உங்கள் வீட்டில் பழைய ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல் போன்ற பொருட்கள் மூலையில் போட்டு வைக்கக்கூடாது. அதில் தூசி தும்புகள் படிய கூடாது. நீங்கள் பயன்படுத்தினால் பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்த முடியாத பட்சத்தில் சுத்தமான துணியை கொண்டு மூடி வெளியிடங்களில் இடம் இருந்தால் அங்கு வைத்துக் கொள்ளலாம். வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்றால் சமையல் அறையில் வைத்துக் கொள்வது உத்தமம். வேறு எங்கும் வைப்பது நல்லது அல்ல.

ஈயம், பித்தளை, செம்பு, இரும்பு பாத்திரங்கள், குடங்கள், அண்டாக்கள் போன்ற பொருட்களை பழையது என்று பரண் மேல் போட்டு வைத்திருப்பவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்வார்கள். அதில் கரையான், பல்லி போன்ற ஜந்துக்கள் முட்டை இட்டு சேதம் ஏற்படுத்தினால் வீட்டில் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள், இழப்புகள் ஏற்படும். எனவே இது போன்ற பொருட்களை கூடுமானவரை தேவை இல்லை என்றால் விற்று விடுவது நல்லது. அப்படி வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் பாலிதீன் பையில் நன்கு மூடி விட்டு பின்னர் பரண் மேல் கவிழ்த்து வைத்து விடுங்கள். இப்படி வைப்பதால் இது போன்ற ஜந்துக்கள் தொல்லை ஏற்படாது.

ammi-kal-aattu-kal

வீட்டில் பழைய துணி மணிகள் கிழிந்த துணி வகைகள் போன்றவை ஒரு பொழுதும் வைத்திருக்கக் கூடாது. கிழிந்த துணி மணிகளை தானம் செய்யவும் கூடாது. எனவே இவற்றை குப்பையில் போட்டு எரித்து விடுங்கள். எந்த ஒரு பொருளாக இருந்தாலும் வீட்டில் தேவை இல்லை என்றால் அதற்குரிய பராமரிப்பு செய்து பாதுகாப்பாக வைக்க வேண்டும் அல்லது தூக்கிப் போட்டு விட வேண்டும். அலட்சியமாக, அஜாக்கிரதையாக வைக்கப்படும் இது போன்ற பொருட்கள் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.