உங்களுக்கு காஃபி ரொம்ப பிடிக்குமா? அப்படின்னா இந்த க்ரீமி காஃபிய வீட்ல நீங்களே போடுங்க!

coffee
- Advertisement -

காஃபிய பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது. அதுலயும் குறிப்பா, கடைக்குப் போயி கேப்புச்சினோ காஃபி குடிக்கணும்னா, யாருக்குத்தான் பிடிக்காது. அந்த கேப்புச்சினோவை நம்ம வீட்டில, நம்ம கையாலேயே போட்டு குடுத்தால், எப்படி இருக்கும்? க்ரீமி காஃபிய எப்படி சுலபமா போடலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம். எலக்ட்ரிக்கல் பீட்டர் இல்லன்னா கூட, இந்த காஃபியை போடமுடியும். எப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க! இந்த காஃபி கடையில குடிக்கிற காஃபி மாதிரியே இருக்கும். பில்டர் காஃபியின் வாசனையை மிஞ்சும். காஃபினு சொல்லும்போதே வாசம் வருது பாருங்க!

coffee-cream2

கேப்புச்சினோ காஃபி செய்ய தேவையான பொருட்கள்:
சர்க்கரை – 1/4 கப்
இன்ஸ்டன்ட் காஃபி பவுடர் எதுவாக இருந்தாலும் – 1/4 கப்
தண்ணீர் – 1/4 கப்

- Advertisement -

சர்க்கரையை எதில் அளந்து எடுத்துக் கொள்கிறார்களோ, அதே கப்பில் காஃபி தூளையும், தண்ணீரையும் அளந்து சேர்க்க வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில், இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து, உங்கள் வீட்டில் எலக்ட்ரிக்கல் பீட்டர் (electric beater) இருந்தால், அதை வைத்து மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் வரை பீட் செய்தால் மட்டுமே போதும்.

coffee-cream

காஃப்பித்தூள் சர்க்கரை தண்ணீர் சேர்ந்த கலவை, க்ரீமி பக்குவத்திற்கு நுரைத்து வரும். இதை ஸ்பூனில் எடுத்தா, கெட்டியா கிரீமியா வரணும். உங்களுக்கு தேவையான காஃபி கிரீம் தயார்! அவ்வளவுதான்! சுலபமா ரெடி ஆயிடுச்சா?இதை தேவையான அளவு பயன்படுத்திக் கொண்டு, மீதம் உள்ள க்ரீமை, காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் 10 நாட்களுக்குக் கூட கெடாமல் இருக்கும். தேவைப்படும்போது பிரிட்ஜில் இருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

நுரை பொங்கப் பொங்க இருக்கிற இந்த க்ரீமை, இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து கப்பில் போட்டு கொள்ளுங்கள். சுட சுட பாலை இதில் ஊற்றினீர்கள் என்றால், க்ரீம் பொங்க பொங்க காஃபியின் மணம் வீசும்! ஒரு ஸ்பூன் விட்டு, லேசாக கலக்கினால் கேப்புச்சினோ காஃபி ரெடி! காஃப்பிய பிடிக்காதவங்க கூட, இந்த காஃப்பிய குடிப்பாங்க. உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க! உங்க வீட்ல எலக்ட்ரிக்கல் பீட்டர் இல்லையா? அதற்கும் ஒரு வழி இருக்குது. தெரிஞ்சுக்கலாமா?

beating

1 டேபிள்ஸ்பூன் அளவு சர்க்கரை போட்டுக்கொள்ளுங்கள். 1 டேபிள்ஸ்பூன் அளவு காஃபித்தூள். அதே டேபிள்ஸ்பூன் தண்ணீர், இவை மூன்றையும் அகலமான பாத்திரத்தில் போட்டு ப்ரீசரில் வைத்துவிடுங்கள். 10 நிமிடம் ஃப்ரீஸரில் வைத்தால் போதும். இந்த கலவையை ஃப்ரீஸரில் இருந்து எடுத்து, உங்கள் வீட்டில் இருக்கும் விஸ்க் வைத்து, கையால் அடித்துக் கலக்க வேண்டும். முட்டை அடித்து கலக்குவது போல!

- Advertisement -

coffee-cream1

ஆனா, இதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். எலக்ட்ரானிக் பீட்டரின் மூன்று நிமிடத்தில் தயாராகும் க்ரீம், கையால் அடித்து கிளறினால் 7 நிமிடங்கள் வரை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த க்ரீமையும் பாலில் சேர்த்து குடித்தால், எலக்ட்ரானிக் பீட்டரின் கலந்த க்ரீமை போலவே, நீங்கள் தயார் செய்த காஃபி சூப்பராக தான் இருக்கும். ஆனால் க்ரீமில் நுறைத்த தன்மை மட்டும் கொஞ்சம் கம்மியாக இருக்கும். அவ்வளவு தான். உங்களுக்கு சர்க்கரை அதிகமாக தேவைப்பட்டால் காஃபி கலக்கும்போது சேர்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் இன்னிக்கு சாயங்காலமே, இந்த காஃபிய உங்க வீட்ல போட்டு தான் பாருங்களேன்! புடிச்சிருந்தா ட்ரை பண்ணுங்க!

இதையும் படிக்கலாமே
மொறு மொறு கடலைப்பருப்பு மசாலா வறுவல்! வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -