ஒரு குழந்தை திருநங்கையாக பிறக்க ஜோதிட காரணங்கள் என்ன தெரியுமா?

arthanreeswarar

பொதுவாக ஆண், பெண் என மனிதர்களுக்குள் இரு பாலர் உண்டு. இதையும் தாண்டி சில குழந்தைகள் இருபாலாருக்குடைய தன்மைகளையும் குணத்தையும் கலந்தவாறு பிறக்கின்றன. அவர்களையே நாம் திருநங்கைகள் என அழைக்கின்றோம். ஒரு குழந்தை வளர வளர தான் அது திருநங்கை என்பதையே நம்மால் அறிய முடியும்.

sivan

ஜோதிட ரீதியாக சில கிரக அமைப்புகளை வைத்தும் திருநங்கைகளை பெரும்பாலும் அறிய முடியும். சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலோ அல்லது சனியும் புதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலோ அல்லது இணைந்து இருந்தாலோ அந்த ஜாதகர் திருநங்கையாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

செவ்வாய் சூரியனுடன் சேர்ந்து ரிஷபம் துலாம் போன்ற ராசிகளின் தொடர்பு ஏற்பட்டாலும் அல்லது சந்திரனின் அம்சம் பெற்றாலும் அந்த ஜாதகர் திருநங்கையாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். இதை தவிர்த்து ஒருவருக்கு பிறகும் வாரிசு திருநங்கையாக பிறப்பதற்கான வேறு ஒரு காரணத்தையும் ரிஷிகள் கூறியுள்ளனர்.

sivan

ஒரு ஆண் அவன் மனைவியோடு தாம்பத்ய உறவில் இணையும் சமயத்தில் மனைவியை விட அவன் வலிமையுடையவனாக இருந்தால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும். மனைவி கணவனை விட வலிமையுடையவளாக இருந்தால் பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்கும். இருவரும் சமவலிமையோடு இருந்தால் பிறக்கும் குழந்தை திருநங்கையாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

arthanareswarar

எது எப்படி இருந்தாலும் திருநங்கையும் மனிதப்பிறவிகள் தான். அவரைகளை வெறுத்து ஒதுக்காமல் சிறுவயதில் இருந்தே அவர்களை காத்து அரவணைத்து செல்வதே நல்லது.