இறந்த பிறகு தற்கொலைக்கான காரணத்தை சொன்ன ஆன்மா – வீடியோ

hypnotheraphy

நம் மானிட சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இப்பிரபஞ்சத்தில் இருப்பதாக மக்களில் பெருவாரியானவர்கள் நம்புகிறார்கள். “எப்பொருளும் அழிவதில்லை அதன் வடிவமும் மூலக்கூறுகளும் மாறுதல் மட்டுமே அடைகின்றன” என்பது மெய்ஞ்ஞானிகளும், விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு உண்மையாக இருக்கிறது. இதனடிப்படையில் இறந்து போன மனிதர்கள் தங்கள் உடலை விட்டு நீங்கினாலும், கண்ணுக்குத் தெரியாத ஆவி வடிவில் இங்கேயே இருப்பதாகவும் கூறுகிறார்கள். அப்படி ஆன்மா வடிவில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ளும் ஒருக் கலை தான் “ஹிப்னோதெரபி” இக்கலையைப் பயன்படுத்தி இறந்து போனவர்களின் ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்வதைப் பற்றியறிய இக்காணொளியைக் காண்போம்.

தற்கொலை செய்து இறந்துபோன ஒரு நபரின் சகோதரர் அந்நபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் அறியாமல் தானும்,தனது குடும்பத்தாரும் இன்று வரை விடைத் தெரியாமல் தவிப்பதாகவும் கூறினார். அதற்கான விடைப் பற்றியறிய இந்த ஹிப்னோதெரபி நிபுணரை அணுகினார். சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொண்ட பின்பு இறந்து போன அந்நபரின் சகோதரரை “ஹிப்னோதெரபி” மூலம் அவரை ஆழ்நிலை மனோவசிய தூக்கத்தில் ஆழ்த்தி அந்நபரின் உடலில் தற்கொலை செய்து கொண்ட அவர் சகோதரரின் ஆன்மாவை வரச் செய்து சில கேள்விகளைக் கேட்கிறார்.

அக்கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்த பின்பு சில நேரங்களித்து மனோவசிய தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் இந்நபர் இறந்து போன தன் சகோதரரின் ஆன்மா தனக்குள் வந்ததாகவும் ‘தான் ஒரு பெண்ணைக் காதலித்ததால் ஏற்பட்ட பிரச்சனையால் பயந்து அவசரப்பட்டு இத்தவறான முடிவை எடுத்து விட்டதாகவும் அதற்காக வருந்துவதாக கூறியதாக அவரின் சகோதரர் கூறினார். இப்போது தானும் தன் குடும்பமும் மனநிம்மதி அடைவோம் என மேலும் கூறினார்.நம் ஆறறிவிற்க்கு எட்டாத விஷயங்கள் இவ்வுலகில் பல.