உடலுக்கு குளிர்ச்சி தரும் குளு குளு இளநீர் பாயாசம் செய்வது எப்படி? கேரளத்தின் ஸ்பெஷலை நம் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்

இளநீர் பாயாசம்
- Advertisement -

சுபகாரியங்களிலும், விசேஷ நாட்களில் வீடுகளிலும் தவறாமல் இடம்பெறும் ருசியான உணவான பாயசத்தில் பல வகைகள் உள்ளன. பொதுவாக பாயாசம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் கொண்டு பாயாசம் செய்தால், அதன் சுவை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். பாயாசம் நாவிற்கு சுவையை தருகிறதென்றால், உடல் உஷ்ணத்தை போக்கும் மாமருந்தாக இளநீர் இருக்கிறது. சுவை மற்றும் உடல் ஆரோக்கியம் என்ற இந்த இரண்டும் கலந்து இருக்கும், கேரளத்தின் பிரசித்திப் பெற்ற இந்த இளநீர் பாயாசத்தை செய்யும் முறையை இந்த பதிவில் நாங்கள் வழங்கியுள்ளோம்.

இளநீர் பாயாசம்

தேவையான பொருட்கள்:
பசும்பால் – அரை லிட்டர், இளநீர் வழுக்கைத் துண்டுகள் – ஒரு கப், சர்க்கரை – தேவையான அளவு, ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய்பால் – ஒரு கப், நெய் – ஒரு தேக்கரண்டி, முந்திரி – 10.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடி கனமான ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி நெய்யை விட்டு, அதில் முந்திரிப் பருப்பை போட்டு பொன்னிரமாக வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். இளநீர் வழுக்கைத் துண்டுகளை சிறிது சிறிதாக வெட்டிக் கொண்டப் பின்னர், அதில் பாதியை தனியாக எடுத்து வைத்துவிடவும் (பின்னர் பரிமாறும்போது சேர்த்துக் கொள்வதற்காக). மீதமிருக்கும் வழுக்கைத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, அதனுடன் சிறிது சர்க்கரை மற்றும் இளநீரை சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இளநீர்

ஒரு பாத்திரத்தில் பசும்பாலை தண்ணீர் சேர்க்காமல் ஊற்றி நன்கு காய்ச்சிக் கொள்ளவும். எடுத்துக் கொண்ட பாலானது பாதியாக குறையும் வரை காய்ச்சிய பின்னர், அதனுடன் அரைத்து வைத்திருக்கும் இளநீர் வழுக்கைத் துண்டு விழுது மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்தப் பின்னர், தேங்காய் பால் சேர்த்து இறக்கி விடவும்.

- Advertisement -

இதை மற்றவர்களுக்கு பரிமாறும் போது ஏற்கனவே எடுத்து வைத்துள்ள இளநீரின் வழுக்கைத் துண்டுகள் மற்றும் வறுத்த முந்திரிப் பருப்பு ஆகியவற்றை கலந்து கொடுத்துப் பாருங்கள், அதன் சுவையில் மெய் மறந்து போவார்கள். மேலும் கெட்டியான பாயாசம் வேண்டுமென்றாலும், இதில் மேலும் சுவையைக்கூட்ட நினைப்பவர்களும் இதனுடன் கான்ஸ்டன்ட் மில்க்கும் சேர்த்துக் கொள்ளலாம்.

இளநீர் பாயாசம்

பின்குறிப்பு:
பாயாசத்திற்கு உபயோகப்படுத்தும் இளநீரின் துண்டுகள் மென்மையானதாக இருக்கு வேண்டும். கெட்டியான தேங்காய் துண்டுகளை பயன்படுத்துக் கூடாது. கான்ஸ்டன்ட் மில்க் இல்லாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.

- Advertisement -