உலகின் முதல் மனிதன் இந்தியாவில் தோன்றியதற்கான சான்று இதோ.

man

விஞ்ஞான ரீதியாக மனிதன் தோன்றிய இடம் என ஆப்பிரிக்க கண்டம் கூறப்படுகிறது. மிருக நிலையிலிருந்து மனிதனாக பரிணாமம் அடைந்த போது அவனின் சிந்தனை ஆற்றல் பெருகி, வாழ்க்கைக்கு தேவையானவற்றை கண்டுபிடித்த போது, தனது ஆன்மீக தேவைக்கான மதத்தையும் உருவாக்கினான். அந்த வகையில் உலகின் மிகப்பழமையான மதம் எனக் கூறப்படும் “இந்து” மதத்தின் பெருமைகளை அதை அதிகம் பின்பற்றும் இந்தியர்களே அறியாத போது, பிறப்பால் அமெரிக்கரான ஒருவர் நமது நாட்டின் பழமை மற்றும் அதன் சிறப்புகளை உலகெல்லாம் பறைசாற்றுகிறார். அவரை பற்றியும், அவர் இந்தியாவை பற்றியும் கூறு கருத்துகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

jeffry

“ஜெப்ரி ஆர்ம்ஸ்டராங்” அமெரிக்காவில் பிறந்தவர். அமெரிக்காவின் “சிலிக்கான் பள்ளத்தாக்கு” எனப்படும் கணினி சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்திருக்கும் நகரத்தில், ஒரு நிறுவனத்தில் வருடத்திற்கு லட்சக்கணக்கில் ஊதியம் பெரும் ஒரு உயரிய பதவியில் 15 ஆண்டுகள் காலம் நிர்வாக இயக்குனராக பணியாற்றியவர். வசதிகள் நிறைந்த வாழ்க்கையாக இருந்தாலும் அதில் சலிப்பு ஏற்பட்டு மதங்கள், தத்துவங்கள் குறித்து படித்து வந்த இந்தியாவின் பண்டைய கால வேதங்களை அவர் படித்தார். அதில் படித்த பின்பு இந்திய மதம், பண்பாடு, மொழி, கலாச்சாரம் குறித்து அணிந்து கொள்ள இந்தியாவிற்கு வந்து பல யோகிகள் ஞானிகளிடம் சீடராக இருந்து தவ யோகங்கள், வேத தத்துவங்கள் பற்றி அறிந்து கொண்டார். இதன் பின்பு தனது லட்சங்களில் ஊதியம் தரும் வேலையை நிரந்தரமாக விட்டு, முழு நேரமும் இந்திய தத்துவங்கள், வேத அறிவியல், யோகம், ஆயுர்வேதம் போன்ற கலைகளில் முறையான பயிற்சி பெற்று, அதை பிறருக்கும் கற்று தரும் பயிற்சியாளராக மாறினார். உலகின் பல முன்னணி நிறுவனங்களுக்கு தொழில் ஆலோசகராகவும், ஊக்கப்படுத்தும் பேச்சாளாராவும் இருந்து வருகிறார்.

ஜெப்ரி ஆர்ம்ஸ்ட்ராங் கூறும் போது ” நான் பல ஆண்டுகளாக ஆன்மீக தேடல்களிலிருந்த போது இந்தியாவின் ஆன்மீக தத்துவங்களை, அது எழுதப்பட்ட சமஸ்கிருத மொழியிலேயே படித்தேன். அப்போது நான் மிகுந்த வியப்புக்குள்ளானேன். ஏனெனில் சம்ஸ்கிருத மொழி “கிரேக்கம், லத்தீன்” போன்ற மொழிகளுக்கு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்ற உண்மையை அறிந்தேன். மேலும் இந்த “கிரேக்கம், லத்தீன்” போன்ற மொழிகளுக்கு தாய் மொழியாக “சமஸ்கிருதம்” இருப்பதை உணர முடிந்தது. இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி புரிந்த ஐரோப்பியர்கள் தாங்கள் தான் உலகின் பழமையான நாகரீகம் கொண்டவர்கள் என எண்ணி கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவை பற்றி ஆராயும் போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம் இந்திய வேத நூல்கள் மற்றும் குறிப்புகளில் “50,000 லிருந்து 90,000” ஆண்டுகளுக்கு முற்பட்ட வானியல் நட்சத்திரங்களின் தோற்றம், எண்ணிக்கை கிரகங்களின் நிலை போன்றவற்றை பற்றிய தெளிவான குறிப்புகள் அதில் இருந்தன.

இப்போது இந்த ஐரோப்பியர்களுக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது. காரணம் ஐரோப்பியர்களை பொறுத்தவரை உலகின் மனித நாகரிகம் என்பது 2000 ஆண்டுகள் வரை மட்டுமே பழமையானது. எனவே இந்தியாவின் நாகரீக காலத்தை அவர்கள் குறைத்து மதிப்பிட முயன்ற போதும் அது 7000 ஆண்டுகள் முந்தைய வானியல் நிகழ்வுகள், சரித்திரங்களை கூறுவதாகவே இருந்தது. தங்களின் நாகரீகத்தை காட்டிலும் பழமையான நாகரீகம் என்கிற புகழ் இந்தியாவிற்கு கிடைக்காமல் இருக்க “ஆரிய – திராவிட” கொள்கையை உண்டாக்கி, “ஆரியர்கள்” எனும் மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்த ஒரு நாடோடி கூட்டம் இந்தியாவிற்கு குதிரைகளின் மீது வந்து, இந்த நாட்டின் பூர்வீக குடிகளுடன் போரிட்டு, அவர்களை தோற்கடித்து, நாகரீகத்தை கற்றுத் தந்ததாக கட்டுக்கதைகளை அள்ளிவிட்டனர்.

- Advertisement -

ஆனால் சமீப கால ஆராய்ச்சிகளில் இந்த ஆரிய – திராவிட கூற்று பொய் என மேற்கத்திய நாட்டு ஆய்வாளர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். உலகின் மிகப்பழமையான நாகரீகம், மொழி, விஞ்ஞானம் சார்ந்த வாழ்வியல் முறை போன்றவற்றை அளித்த இந்தியர்களில் பெரும்பாலானோர் இதைப்பற்றிய பெருமித உணர்வில்லாமல் இருப்பது பல நேரங்களில் எனக்கு வருத்தமளித்தது. ஆனால் நான் பயிற்சியளிக்கும், பேசும் இடங்களில் எல்லாம் இந்தியாவின் இந்த பெருமையை பறைசாற்றி வருகிறேன்.” என்று கூறினார் பேச்சாளர், ஆன்மீகவியலாளருமான ஜெப்ரி ஆர்ம்ஸ்ட்ராங்.

இதையும் படிக்கலாமே:
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு உதவிய சீனர்களை பற்றி தெரியுமா

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான கட்டுரை படிக்க எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Indian civilization and culture in Tamil.