பவுலிங்கில் ஆஸ்திரேலிய வீரர்களை பின்னுக்கு தள்ளி அறிய சாதனை படைத்த இந்திய வீரர் இவரா ?

jadeja 1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது நடைபெற்று இன்னிங்சில் 443 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 292 ரன்கள் முன்னிலை பெற்றது.

Ash

இரண்டாவது இன்னிங்க்ஸை 106 ரன்களில் குவித்த இந்திய அணி டிக்ளேர் செய்து ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் என்ற கடினமான இலக்கினை நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியை சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்சில் 2 விக்கெட்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுகள் என மொத்தம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் அவர் ஒரு அறிய வகை சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது டெஸ்ட் போட்டிகளில் முதல் 40 ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். மொத்தம் 189 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் மிட்சல் ஜான்சன் ஆவர்.

jadeja

ஜான்சன் 40 ஆட்டங்களில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதற்கு அடுத்த இடத்தில் மிட்சல் ஸ்டார்க் 165 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த இரண்டு ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை பின்னுக்கு தள்ளி ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

கவாஸ்கரை மறைமுகமாக தாக்கி பேசிய MS தோனி – இது வீரர்களின் விருப்பம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்