ஜவ்வரிசி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?

javvarisi

நமது நாட்டின் உணவுகள் பெரும்பாலும் பிற உயிர்களைக் கொள்ளாத சைவ வகை உணவை சார்ந்ததாகவே இருக்கிறது. மேலும் இந்த நாட்டில் தெய்வங்களுக்குரிய பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அக்காலத்தில் சாத்வீக வகை உணவுகளையே தயாரித்து இறைவனுக்கு படைக்கின்றனர். அந்த சாத்வீக உணவு பட்டியலில் இடம்பெறும் ஒரு உணவுப் பொருளாக ஜவ்வரிசி இருக்கிறது.ஜவ்வரிசி என்றதும் நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது விஷேஷ தினங்களில் செய்யப்படும் ஜவ்வரிசி பாயசம் தான். ஜவ்வரிசி என்பது பதப்படுத்தப்பட்ட ஒரு சைவ வகை உணவாகும். இந்த ஜவ்வரிசி மரவள்ளிக் கிழங்கில் எடுக்கப்படும் ஸ்டார்ச்சிலிருந்து செய்யப்படுகிறது. இதனை இந்தியாவின் வடமொழிகளில் சாகோ, சகுடானா, சபுடானா, சௌவாரி என்றும் அழைக்கின்றனர். இந்த ஜவ்வரிசி கொண்டு செய்யப்படும் உணவு பொருட்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

javvarisi

ஜவ்வரிசி பயன்கள்

சீதபேதி நிற்க
நாம் சாப்பிடும் உணவுகளில் மிக ஆபத்தான கிருமிகள் இருந்து, அதை நாம் உட்கொண்டால் சீதபேதி ஏற்படுகிறது. இந்த சீதபேதி ஏற்பட்டவர்கள் உடலில் நீர் சத்திழப்பு அதிகளவில் ஏற்பட்டு மிகவும் சோர்வடைந்து விடுவார்கள். சீதபேதி நிற்பதற்கு ஒரு எளிய இயற்கை மருத்துவ பொருளாக ஜவ்வரிசி இருக்கிறது. சீதபேதி பாதிப்புக்குள்ளானவர்கள் பெரியவர்களாக இருக்கும்பட்சத்தில் 20 கிராம் ஜவ்வரிசியை நீரில் போட்டு, கொதிக்க வைத்து இளம் சூடான பதத்தில் அருந்தக் கொடுப்பதால் சீதபேதி விரைவில் நிற்கும். குழந்தைகளுக்கு 5 கிராம் அளவு ஜவ்வரிசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட கொடுத்து வந்தால் சீதபேதி பாதிப்பு உடனடியாக நிற்கும்.

அல்சர் குணமாக

ஜீரண உறுப்புகளான உணவுக் குழாய், வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களை அல்சர் என்கின்றனர் மருத்துவர்கள். தினந்தோறும் காலை உணவு சாப்பிடுவதை தவிர்ப்பவர்கள், அதிக சிகரெட் புகைப்பவர்கள் போன்றவர்களுக்கு அல்சர் பாதிப்பு சுலபத்தில் ஏற்படுகிறது. இத்தகைய அல்சர் புண்களை ஆற்றுவதில் ஜவ்வரிசி மிக சிறப்பாக செயல்படுகிறது. ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட எந்த ஒரு உணவும் வகையையும் அடிக்கடி சாப்பிட்டு வருவதால், அவை குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் அல்சர் புண்களை ஆற்றி உணவுக்குழாயில் செரிமானம் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் சுலபமாக கடந்து செல்ல குடற்சுவற்றில் வழுவழுப்புத் தன்மையை உண்டாக்குகிறது.

javvarisi

- Advertisement -

ஊட்டச்சத்து உணவு

ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகமுள்ளது. அரிசி உணவை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கிறது. குறிப்பாக விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் அவர்களின் உடலில் இழந்த சத்துக்களை விரைவில் ஈடு செய்து, தசைகளுக்கு வலிமையைத் தருகிறது. உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.

ரத்த சோகை நீங்க

நமது ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி குறையும் போது அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் உருவாகிறது. இரத்தசோகை நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்த உணவாக இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ரத்தசோகை நோய் ஏற்படாமல் காக்க முடியும்.

javvarisi

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

பெரும்பாலான பழங்களைப் போலவே ஜவ்வரிசியில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த இரண்டு வைட்டமின் சத்துக்களும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய உதவுகிறது. அவ்வப்போது ஜவ்வரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்களை சாப்பிட்டு வருவதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் சத்துகள் கிடைக்கப் பெற்று நமது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது. சுலபத்தில் ஜுரம், தொற்று நோய்கள் நம்மை அணுகாமல் காக்கிறது.

பற்கள் வலுவடைய

நமது உடல்நலத்தில் வாயிலிருக்கும் பற்களும் ஒரு முக்கிய பங்காற்றுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவை நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலமே உணவுப்பொருட்கள் வேகமாக செரிமானம் ஆகின்றன. அந்த உணவுகளை நன்றாக அரைத்து சாப்பிட பற்கள் வலுவாக இருப்பது அவசியம். ஜவ்வரிசியில் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. ஜவ்வரிசி உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு அதில் இருக்கும் கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் அதிக அளவில் சேர்ந்து அவை இரண்டையும் பலப்படுத்துகிறது. பற்களின் எனாமல் சீக்கிரத்தில் தேய்ந்து போகாமல் தடுக்கிறது.

javvarisi

உறுதியான எலும்புகளுக்கு

மனிதர்களின் எலும்புகளுக்குள்ளாக காரைகள் அதிகம் இருக்கின்றன. இந்த காரைகள் வலுப்பெற்றிருக்கும் போது மனித எலும்புகள் சுலபத்தில் உடைவதில்லை. ஆனால் வயதாகும் காலத்தில் வலிமையாக இருக்கும் எலும்பு காரைக்கள் தேய்ந்து விடுகின்றன. ஜவ்வரிசியில் கால்சியம் சத்து அதிகமிருக்கிறது. இந்த ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் கால்சியம் சத்து எலும்புகளுக்குள்ளாக இருக்கும் காரைகளை வலுப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு தேய்மானம் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

இதயம் சீராக இயங்க

நமது இதயம் நன்றாக இயங்கவும், நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கவும் அன்றாடம் அதிக கொழுப்புச் சத்து இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டும். ஜவ்வரிசியில் புரத சத்து அதிகமுள்ளது. இந்த ஜவ்வரிசி உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் மற்றும் இதயத் தசைகளின் இயக்கம் சீராக்கப்பட்டு, இருதய பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.

javvarisi

நீரிழிவு நோய் கட்டுப்பட

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய மிகக் கொடுமையான வியாதிகளில் நீரிழிவு வியாதியும் ஒன்று. இந்த பாதிப்பிற்குள்ளான அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உயராமலும் அதே நேரத்தில் அதிக அதிகம் குறையாமலும் சரியான அளவில் காக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. ஜவ்வரிசியில் நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரிசமமாக வைத்துக் கொள்ளும் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகம் இருப்பதால், இதை அடிக்கடி சாப்பிடும் நீரிழிவு நோயாளிகளுக்கு தங்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியான விகிதத்தில் காக்கப்படுகிறது.

ரத்த அழுத்த பிரச்சனை தீர

35 வயதை அடைந்த ஆண்கள், பெண்களில் பலருக்கும் ரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட தொடங்குகிறது. இந்த ரத்த அழுத்தத்தை சரி வர கவனிக்காவிட்டால் பக்கவாதம், மூளை வாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது. ஜவ்வரிசியில் சிறிதளவு பொட்டாசியம் சத்து இருக்கிறது. இந்த பொட்டாசியம் சத்து ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தங்களை தளர்த்தி, அதிக ரத்த அழுத்தத்தை வெகுவிரைவில் சமமான அளவிற்கு கொண்டு வருகிறது. இந்த ரத்த அழுத்தத்தால் இதயத் தசைகளில் ஏற்படும் மிகுதியான அழுத்தத்தையும் குறைக்கிறது.

இதையும் படிக்கலாமே:
கரும்பு ஜூஸ் நன்மைகள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Javvarisi payangal in Tamil. It is also called as Javvarisi benefits in Tamil or Javvarisi nanmaigal in Tamil or Sago in Tamil.