சித்தரின் குகையை படம் பிடித்தால் கேமரா செயலிழந்து போகும் வினோதம்

Jenukal siddeshwara
- Advertisement -

சித்தர்கள் பலரின் ஆத்மா இன்றும் பல குகைகளில் இருப்பதாக நம்பப்படுகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது ஒரு அமானுஷ்ய குகை. அந்த குகையில் இன்று பல மிருகங்கள் இருப்பதாகவும் அந்த குகையை எவர் படம் பிடித்தாலும் அவரது கண்களும் கேமராவும் பாதிக்க படுவதாகவும் கூறப்படுகிறது. அந்த குகை எங்குள்ளது. அது எப்படி இருக்கிறது என்பது போன்ற தகவல்கள் கீழே உள்ள வீடியோவில் உள்ளது.

- Advertisement -

கர்நாடகா மாநிலத்தில் உள்ள அசன் என்னும் மாவட்டத்தில் உள்ளது ஜெனுக்கள் மலை.இந்த மலையில் ஜெனுக்கள் என்னும் சித்தர் தவம் புரிந்துள்ளார். அவர் தவம் புரிந்த குகை தான் இன்று அந்த மலையில் சக்தி வாய்ந்த குகையாக இருக்கிறது. சாதாரணமாக அந்த குகை அருகில் யாரும் செல்ல இயலாது என்று அங்கு இருப்பவர்கள் கூறுகின்றனர். தவறுகள் செய்பவர்கள் கொடிய பாவம் புரிபவர்கள் யாரெனெ அந்த குகை அருகே சென்றால் அங்குள்ள தேனீக்கள் அவர்களை விரட்டும் என்று கூறப்படுகிறது.

அதோடு இன்று வரை அந்த குகையை பல மிருகங்கள் காத்து வருவதாகவும் நம்பப்படுகிறது. அதற்க்கு அத்தாட்சியாக மிருகங்களுடைய முடி நகம் போன்றவரை அந்த குகையை சுற்றி காணப்படுகிறது. இந்த மலையின் மீது உள்ள ஒரு கோவிலை அடைய சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படிகளை ஏற வேண்டி உள்ளது. ஆனலும் இந்த மலையில் மக்கள் கூட்டம் தினமும் குவிந்த வண்ணமே இருக்கிறது. காரணம் இங்கு ஏதாவது ஒரு வேண்டுதலை வைத்தால் அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

- Advertisement -