உங்களுக்கு வேலை கிடைக்க, நோய்கள் தீர இங்கே சென்றால் நிச்சய பலன் உண்டு

narasimmar

ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் அறுபது ஆண்டுகளாக இருக்கிறது. இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில் அவனது தேவைகள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்த பாடில்லை. தனது வாழ்நாளில் பாதியை வேலை செய்து, செல்வம் ஈட்டி அதை சேர்க்கும் மனிதர்கள், இறைவனை குறித்து இறுதி காலத்தில் மட்டுமே நினைக்கின்றனர். ஆனால் தன்னை வழிபடும் பக்தர்களின் அனைத்து தேவைகளையும் தீர்த்து தனது அருட்கடாச்சத்தை தரும் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் திருக்கோயில் பற்றிய சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Narasimmar

அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில் வரலாறு

சுமார் 2500 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோயிலாக இக்கோயில் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான தெய்வமான திருமாலின் அவதாரமான நரசிம்ம மூர்த்தி காட்டழகிய சிங்கர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தலவிருட்சமாக வன்னி மரம் இருக்கிறது. ராமானுஜரின் சீடரும், ஸ்ரீரங்கத்தில் பிறந்தவருமான பிள்ளை லோகாச்சாரியார் இக்கோயிலில் ஸ்ரீவசநவபூஷணம் முதலிய பதினெட்டு கிரந்தங்களை இயற்றியுள்ளார்.

தல புராணங்களின் படி முற்காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இப்பகுதிக்கருகே வசித்த மக்கள் காட்டு யானைகளின் தொல்லையால் அவதிப்பட்டனர். யானைகளை அடித்து விரட்டுவது இயலாத காரியம், அதே நேரத்தில் அந்த யானைகளை கொல்வதோ மிகவும் பாவமான செயல். இப்படி இரண்டு விடயங்களையும் சிந்தித்து குழம்பிய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இப்பகுதியில் இந்த நரசிம்மர் கோயில் அமைத்தனர். அதன் பிறகு இப்பகுதியில் காட்டு யானைகளின் தொந்தரவு குறைந்தது. காட்டை திருத்தி கோயில் அமைக்கப்பட்ட நரசிம்மர் என்பதால் இவருக்கு காட்டழகிய சிங்கர் என்கிற பெயர் ஏற்பட்டது.

அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில் சிறப்புக்கள்

பொதுவாக கிழக்கு திசை பார்த்தவாறு இருக்கும் பெருமாள் இங்கு மேற்கு திசை பார்த்தவாறு காட்சி தருகிறார். கர்ப கிரகத்தில் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர் தனது இடது தொடையில் லட்சுமி தேவியை அமர வைத்திருக்கும் நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பக்தர்களை காக்கும் அபயஹஸ்த முத்திரையை வலது கையில் நரசிம்மர் கொண்டிருக்கிறார். விஜயதசமி தினத்தன்று ஸ்ரீரங்கம் பெருமாள் இங்குள்ள பெரிய மண்டபத்தில் எழுந்தருளி காலை முதல் மாலை வரை அருள்பாலிக்கிறார். பிறகு குதிரை வாகனத்தில் புறப்பட்டு, வீதியில் இருக்கும் தல விருட்சம் வன்னி மரத்தில் அம்பெய்தி தெற்கு வாசல் வழியாக மூலஸ்தானத்திற்கு செல்கிறார்.

- Advertisement -

narasimha 3

இக்கோயில் ஒரு பிராத்தனை தலமாக விளங்குகிறது. பெருமாளின் ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திர தினத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. பக்தர்கள் விரும்பும் நட்சத்திர தினங்களிலும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இந்த நாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு, தீராத நோய்கள் தீருவது மற்றும் இன்ன பிற விரும்பிய வரங்களை பெருமாள் அருள்வதாக கூறுகிறார்கள் பக்தர்கள். பிரதோஷ நாளில் இந்த நரசிம்மருக்கு செய்யப்படும் பூஜையில் கலந்து கொண்டு வழிபடும் குழந்தை பாக்கியமில்லாத தம்பதிகளுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று உறுதியாக கூறுகிறார்கள். வைகாசி நரசிம்ம ஜெயந்தி, ஆனி சுவாதி நட்சத்திரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், பங்குனி யுகாதி ஆகிய நான்கு நாட்களின் போது ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து தைலக்காப்பு, திருப்பணியாரங்கள் இக்கோயிலுக்கு அனுப்பப்படுகிறது.

கோயில் அமைவிடம்

அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

காலை 6.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில்
ஸ்ரீரங்கம்
திருச்சிராப்பள்ளி – 620006

தொலைபேசி எண்

431 – 2432246

இதையும் படிக்கலாமே:
திருமண தடை நீங்க இங்கு சென்று வழிபடுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kaattu azhagiya singar temple in Tamil. It is also called as Srirangam narasimhar temple in Tamil or Srirangam narasimhar kovil in Tamil or Tiruchirappalli temples in Tamil or Srirangam narasimhar in Tamil.