இந்த ஒரு தானியத்தை 16 நாட்கள் தானம் கொடுத்தாலே போதும். கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனை காணாமலே போய்விடும்.

Thaanam

ஒவ்வொரு மனிதனும் தனக்கு வாழ்வில் ஏற்பட கூடாது என வேண்டிக் கொள்கின்ற விடயம் ஒன்று இருக்குமென்றால் அது கடன் வாங்குதல் என்பது தான். ஆனாலும் இந்த கடன் பிரச்சினை என்பது பலருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாக இருப்பதை நம் வாழ்க்கை அனுபவத்தில் காண்கிறோம். தொகை பெரியதோ, சிறியதோ கடன் வாங்கிவிட்டு, அதை சீக்கிரம் திருப்பி செலுத்தி கடனை அடைக்க முயல்கின்ற ஒரு நபர் அனுபவிக்கின்ற மன வேதனை என்ன என்பதை யாராலும் அறிய முடியாது. நமக்கு ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார ரீதியான கடன்களை தீர்க்க நாம் பல முயற்சிகள் மேற்கொள்ளும் போது, அந்த முயற்சிகளுக்கு ஆன்மீக ரீதியான ஆற்றல் கிடைத்தால் கூடுதல் பலமாக இருக்கும். அத்தகைய ஆற்றல் மிகுந்த ஆன்மீக பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

purse

தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற கடன் பிரச்சனைகள் தீர வேண்டும் என நினைப்பவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் விலங்குகளின் தோல் கொண்டு செய்யப்பட்ட மணிபர்ஸ், பெல்ட், செருப்பு, மேலாடைகள் போன்றவற்றை ஒருபோதும் பயன்படுத்த கூடாது. ஏனெனில் இந்த விலங்குகளின் தோல் மற்றும் இதர பாகங்களினால் செய்யப்பட்ட பொருட்களிலிருந்து வெளிப்படும் நுண்ணிய அதிர்வலைகள், நமது உடலில் இயற்கையாக இருக்கின்ற பிராணன் எனப்படும் நேர்மறையான மின்காந்த உயிர்ச்சக்தியை எதிர்மறை சக்தியாக மடைமாற்றம் செய்து நமக்கு அவ்வப்போது உடல் நலக்குறைவு, பிறருடன் விரோதம், செல்வம் அதிகம் சேர்க்க முடியாத நிலை போன்றவற்றை உண்டாக்கும் என்பது உண்மை.

உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள கோவிலுக்கு தொடர்ந்து 16 நாட்கள் கொள்ளு தானியங்களை நிவேதனமாக கொடுத்து வர வேண்டும் அல்லது கொள்ளு தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகளை கோவிலுக்கு சென்று வழிபாடு, செய்த பிறகு அங்கு வரும் பக்தர்கள் உண்பதற்கு பிரசாதமாக கொடுக்கலாம்.

kollu

நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் ஏதேனும் ஆறு அல்லது ஓடையோ இருக்கும் பட்சத்தில், தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் ஏதேனும் ஒரு வகை மலரினை பறித்து சென்று, அந்த ஆறு, நீரோடைகளில் உங்களின் கடன் பிரச்னைகள் விரைவில் தீர வேண்டுமென மானசீகமாக வழிபட்டு, அந்த மலரை அந்த ஆற்று ,ஓடை நீரில் விட வேண்டும். இப்படியே தொடர்ந்து 43 நாட்கள் செய்து வர வேண்டும். தொடர்ச்சியாக செய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், மீண்டும் முதலில் இருந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

தூய்மையான நாட்டு பசுமாட்டு கோமியத்தை வாங்கிக் கொண்டு வந்து, அதை தினந்தோறும் காலையில் அதிலும் குறிப்பாக 6 மணிக்குள்ளாக எழுந்து குளித்து முடித்து, ஒரு கிண்ணத்தில் பசு கோமியத்தை ஊற்றி, சில மாவிலைகளை கொண்டு அந்த கோமியத்தினை தொட்டு, வீட்டின் அனைத்து மூலைகளிலும் தெளித்து வரவேண்டும்.

சிவபெருமானையும் பார்வதியையும் வழிபடுபவர்கள் அனைத்து கடினமான சூழ்நிலைகளையும் கடக்கிற ஆற்றல் கிடைக்க பெறுவார்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவபெருமான் கோயிளுக்கு, உங்களால் முடிந்த பொழுதெல்லாம் அக்கோயிலின் சிவலிங்க அபிஷேகத்திற்கு தூய்மையான வெள்ளை நிற நாட்டு பசுமாடுகளிடம் கறக்கப்பட்ட பசும்பாலை கொடுத்து வர வேண்டும் அல்லது 11 திங்கட்கிழமைகள் இத்தகைய நாட்டு மாடு பாலினை சிவலிங்க அபிஷேகத்திற்கு கொடுத்து வந்தால், உங்களின் எத்தகைய கடன் பிரச்சனைகளும் படிப்படியாக தீருவதை கண்கூடாக அனுபவத்தில் காணலாம்.