உங்கள் கடன்கள் அனைத்தும் தீர உங்கள் லக்னபடி இதை செய்தால் போதும்

Astrology
- Advertisement -

லக்னத்தில் இருந்து 6-ம் இடம் என்பது ருண – ரோக – சத்ருஸ்தானம் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-க்கு உடையவன் வலுப்பெற்று இருந்தால், அந்த ஜாதகருக்கு பொருளாதார ரீதியாக சரிவு ஏற்படுவதுடன், பெருத்த கடன்களையும் உண்டாக்கும். மேலும் எதிரிகளாலும், நோய்களாலும் துன்பப்பட நேரிடும். ஒவ்வொரு லக்னத்தைச் சேர்ந்தவர்களும் உரிய பரிகாரம் செய்வதன் மூலம் கடன்களில் இருந்து விடுபடலாம்.

மேஷ லக்னம்:
Mesham Rasi
மேஷ லக்னத்துக்கு 6-ம் இடமான கன்னிக்கு உரிய கிரகம் புதன். புதன் கிரகம் கன்னியிலேயே வலுப்பெற்று அமைந்திருந்தால், ஜாதகருக்குக் கடன் சுமை உண்டாகும். கடன் சுமைகளில் இருந்து விடுபட, திருப்பதிக்குச் சென்று பெருமாளை வழிபடுவதுடன், ஏழை அந்தணருக்குப் பச்சை நிற வஸ்திரங்கள், பச்சைப்பயறு போன்றவற்றை தானம் செய்யலாம்.

ரிஷப லக்னம்:

- Advertisement -

Rishabam Rasi

ரிஷப லக்னத்துக்கு 6-ம் இடம் துலாம். துலாம் ராசிக்கு உரிய கிரகம் சுக்கிரன். சுக்கிரன் துலாமிலேயே வலுப் பெற்றிருந்தால், கடன்கள் ஏற்படும். கடன்கள் தீரவேண்டுமென்றால், ஸ்ரீரங்கத்துக்குச் சென்று ரங்கநாதப் பெருமாளைத் தரிசிப்பதுடன், பளபளப்பான வெண்ணிற வஸ்திரம், மொச்சை போன்றவற்றை தானம் செய்தால் கடன்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மிதுன லக்னம்:

- Advertisement -

Mithunam Rasi

மிதுன லக்னத்துக்கு 6-க்கு உடைய செவ்வாய் 6-ம் இடமான விருச்சிகத்திலேயே வலுப்பெற்று இருந்தால், வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று செல்வ முத்துக்குமாரசுவாமியை வழிபடுவதுடன், செந்நிற வஸ்திரம், துவரம்பருப்பு போன்றவற்றை தானம் செய்யலாம்.

கடக லக்னம்:

- Advertisement -

Kadagam Rasi

கடக லக்னத்துக்கு 6-க்கு உரிய கிரகமான குரு தனுசு ராசியில் வலுப்பெற்று இருந்தால், திட்டைக்குச் சென்று குரு பகவானை வழிபடுவதுடன், பொன்னிற வஸ்திரத்தையும், கறுப்பு கொண்டைக்கடலையையும் தானம் செய்வது கடன்களில் இருந்து நிவாரணம் தரும்.

சிம்ம லக்னம்:

simmam

சிம்ம லக்னத்துக்கு 6-க்கு உடைய சனி 6-ல் வலுப்பெற்று இருந்தால், குச்சனூருக்குச் சென்று சனி பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதுடன், ஏழை அந்தணருக்குக் கருநீல வஸ்திரம், எள், வெல்லம் போன்றவற்றை தானம் செய்யலாம்.

கன்னி லக்னம்:

Kanni Rasi

கன்னி லக்னத்துக்கு 6-க்கு உடைய சனி 6-லேயே வலுப்பெற்று இருந்தால், திருநள்ளாறு சென்று சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். முன் சொன்னபடியே கருநீல வஸ்திரம், எள், வெல்லம் போன்றவற்றை ஏழை அந்தணருக்குத் தானம் செய்ய வேண்டும்.

துலா லக்னம்:

Thulam Rasi

துலா லக்னத்துக்கு 6-க்கு உடைய குரு மீனத்திலேயே வலுப்பெற்று இருந்தால், ஆலங்குடிக்குச் சென்று தட்சிணாமூர்த்தியைத் தரிசித்து, பொன்னிற வஸ்திரம், கறுப்பு கொண்டைக்கடலை போன்றவற்றை ஏழை அந்தணருக்குத் தானம் செய்து நிவாரணம் பெறலாம்.

விருச்சிக லக்னம்:

virichigam

விருச்சிக லக்னத்துக்கு 6-க்கு உடைய கிரகமான செவ்வாய் மேஷத்திலேயே வலுப்பெற்று இருந்தால், திருச்செந்தூருக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு, செந்நிற வஸ்திரம் மற்றும் துவரை போன்றவற்றை தானம் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும்.

தனுசு லக்னம்:

Dhanusu Rasi

தனுசு லக்னத்துக்கு 6-க்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர்கள் கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், மொச்சை, பளபளப்பான வெண்ணிற வஸ்திரம் போன்றவற்றை தானம் செய்யலாம்.

மகர லக்னம்:

Magaram rasi

மகர லக்னத்துக்கு 6-க்கு அதிபதியான புதன் 6-ல் வலுப்பெற்று இருந்தால், திருவெண்காடு சென்று வழிபடுவதுடன், பச்சை நிற வஸ்திரம், பச்சைப்பயறு போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.

கும்ப லக்னம்:

Kumbam Rasi

கும்ப லக்னத்துக்கு 6-க்கு அதிபதி சந்திரன். இவர் கடகத்தில் வலுப் பெற்று இருந்தால், திங்களூருக்குச் சென்று சந்திரனுக்கு அர்ச்சனை செய்து, வெண்ணிற வஸ்திரம், பச்சரிசி தானம் செய்ய வேண்டும்.

மீன லக்னம்:

meenam

மீன லக்னத்துக்கு 6-க்கு உரிய சூரியன் 6-ல் வலுப்பெற்று இருந்தால், சூரியனார்கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து, ஆரஞ்சு நிற வஸ்திரம் மற்றும் கோதுமை தானம் செய்தால் கடன்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மேலே சொன்ன பரிகாரங்களைச் செய்ய இயலாதவர்கள் ஆறு வாரங்களுக்குப் பசுவுக்கு வாழைப் பழங்களும், அகத்திக்கீரையும் தந்து வந்தால் கடன்களில் இருந்து சிறிது சிறிதாக நிவாரணம் பெறலாம்.

- Advertisement -