கடன் பிரச்சனை மிக விரைவில் தீர்ந்து, மன நிம்மதியுடன் வாழ தாந்த்ரீக யோகிகள் கூறிய சில எளிய பரிகார முறைகள்.

Kadan theera pariharam

இன்றைய காலத்தில் ஒருவர் என்னதான் கடினமாக உழைத்து பொருள் ஈட்டினாலும் வீடு கட்டுவது, திருமணம், வாகனம் வாங்குதல் போன்ற சுபகாரியங்களுக்கு கடன் வாங்குவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அப்படி கடன் வாங்கி மேற்சொன்ன காரியங்களை செய்தாலும் வாங்கிய கடனுக்கு வட்டியும் சேர்த்து அசல் தொகையை திருப்பித் தருவதில் பெரும்பாலானவர்களின் பாதி வாழ்க்கை முடிந்து விடுகிறது. இப்படி ஒரு மனிதனின் பாதி வாழ்க்கை முழுவதும் நீடிக்கின்ற கடன் பிரச்சனை விரைவில் தீர தாந்த்ரீக யோகிகள் கூறிய சில எளிய பரிகார முறைகள் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

money

பொதுவாக நமது நாட்டில் தென்னிந்தியர்களை, விட வட இந்திய மக்கள் அதிக செல்வ வளத்துடன் வாழ்வதற்கு காரணம், அவர்கள் பணத்தை ஈர்ப்பதற்கும், அந்த பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர அவர்களின் முன்னோர்களால் கூறப்பட்ட ரகசிய தாந்திரீக பரிகாரங்களை செய்து கொள்வதால் தான். இதற்கு முன்பு வரை மிகவும் ரகசியமாக பின்பற்றப்பட்ட இந்த தாந்த்ரீக பரிகார முறைகள் தற்போதைய நவீன காலத்தில் அனைவருக்கும் பயன்படுகின்ற வகையில் வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக கடன் பிரச்சனைகளால் தவிப்பவர்கள் வாங்கிய கடனுக்கு வட்டியும், அசலும் செலுத்த முடியாதவர்கள் ஒரு பெரிய புளிய மரத்தின் ஒரு சிறிய கிளையை உடைத்தெடுத்து, தங்கள் வீடுகளில் கடன் அடைப்பதற்கான பணம் வைக்கும் இடத்தில் அந்த புளிய மர இலையை வைப்பதால் மிக சீக்கிரத்தில் கடனை அடைக்க உதவும். உங்கள் வீட்டிற்கருகில் இருக்கின்ற பெருமாள் கோயிலுக்கு சென்று லட்சுமி தாயாருக்கு அலங்காரம் செய்ய மல்லிகை பூ மாலையை தானம் செய்ய வேண்டும். நீங்கள் வாங்கியது சிறிய அளவிலான கடன் தொகையாக இருந்தால் வாரத்தின் ஏழு நாட்களுக்கு இத்தகைய மல்லிகை பூ மாலையை லட்சுமி தேவிக்கு தானம் கொடுத்தால் போதும். கடன் தொகை மிகப் பெரியதாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தினத்தன்றும் மகாலட்சுமி அலங்காரத்திற்கு மல்லிகை பூ மாலையை தானம் கொடுப்பதால் வெகுசீக்கிரத்தில் உங்களின் கடன் பிரச்சனை தீர லட்சுமி தேவி அருள் புரிவாள்.

வியாழக்கிழமை தினத்தன்று ரசாயன கலப்பில்லாத குங்குமத்தை வாங்கிக்கொள்ளவேண்டும். பிறகு இந்த குங்குமத்தை மறுநாள் வெள்ளிக்கிழமையன்று உங்கள் வீட்டிற்கருகில் இருக்கின்ற ஏதேனும் ஒரு அம்மன் கோயிலுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இப்படி 11 வியாழன் – வெள்ளிக்கிழமைகளில் மேற்சொன்ன பரிகாரத்தை செய்து வந்தால் எவ்வளவு பெரிய தொகையை நீங்கள் கடனாக வாங்கி இருந்தாலும், அது மிக விரைவாக தீர்ந்து நிம்மதியான வாழ்க்கை வாழ வழிவகை செய்யும்.

கோவில்களில் இருக்கின்ற பசுமாட்டிற்கோ அல்லது உங்கள் வீடுகளில் வளர்க்கப்படுகின்ற பசுமாட்டிற்கோ ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று வெல்லம் கலந்த உணவுப்பொருளை, உங்கள் கைகளால் உண்பதற்கு கொடுப்பதால் உங்களின் தற்போதைய கடன் பிரச்சினைகளும் மிக விரைவில் தீரும். இந்த பரிகாரத்தை குறைந்தபட்சம் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் செய்ய வேண்டும்.

indianvulture

பறவையினத்தில் கழுகுகளில் பிணந்தின்னிக் கழுகு ஒரு வகையாகும். இந்த கழுகுகள் பெரும்பாலும் உயரமான மலைப்பாறைகள் நிறைந்த பகுதிகளில் அதிகம் வாழும். அத்தகைய பிணந்தின்னி கழுகுகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்தால், அந்தக் கழுகுகள் வசிக்கின்ற பகுதிக்கு கீழாக உதிர்ந்து இருக்கும் பிணந்தின்னிக் கழுகுகளின் 7 கழுகு சிறகுகளை கொண்டு வந்து நீங்கள் கடன் தீர்க்க பணத்தை சேமித்து வைக்கும் இடங்களில் வைப்பதால் வெகு விரைவிலேயே உங்கள் கடன்கள் அனைத்தையும் கட்டி முடித்து மன நிம்மதி பெறலாம்.