எந்த 4 ராசிக்கு கடன் தொல்லை அதிகமாக இருக்கும் தெரியுமா? உங்க ராசியும் இதுல இருக்கான்னு நீங்களே பார்த்துக்கோங்க!

astro-cash1

கடன் இல்லாத மனிதனே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைவருக்கும் கடன் இருக்கிறது தான் ஆனால் அது அதிகமாக யாருக்கு இருக்கும்? ஒரு மனிதனுடைய சுயஜாதகத்தை ஆராயும் பொழுது அவனுடைய வாழ்வில் கடன் ஏற்படுமா? எந்த வயதில் ஏற்படும்? என்பதை தெரிந்து கொள்ளலாம். 12 ராசிகளில் கடனே இல்லாத ராசி என்று எதையும் கூறிவிட முடியாது. அத்தனை ராசிக்காரர்களும் நிச்சயமாக ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கடனை வாங்கி கடனாளியாக தான் இருப்பார்கள். அவ்வகையில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாக கடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

kadan

கடன் தொல்லை அதிகமாக இருக்கும் ராசிகள் நிறைய கர்ம வினைகளை சேகரித்து வைத்திருப்பார்கள். வினைப்பயனின் ஒரு பயனாக கடன் தொல்லை என்பது எல்லோருக்கும் இருக்கும். இது இயற்கையானது தான் என்றாலும் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கடன் தொல்லை என்பது தீரவே தீராத பிரச்சனையாகவே இருக்கும். ஒரு கடனை கட்டி முடித்தால் இன்னொரு கடன் மீண்டும் வாங்கியே ஆக வேண்டும் வேறு வழியில்லை என்கிற நிலைமையில் இருப்பீர்கள்.

ரிஷபம்
rishabam-rasi
ரிஷப ராசிக்காரர்கள் கடன் தொல்லையால் அதிகம் அவதிப்படுபவர்கள் பட்டியலில் முதலாவதாக இருப்பார்கள். கடன் வாங்குவது என்பதே இவருக்குப் பிடிக்காது தான், ஆனாலும் கடன் வாங்குவதை தவிர இவர்களால் எதையும் செய்ய முடியாத சூழ்நிலையில் தவிப்பார்கள். வரிசையாக கடன் வாங்கி அதற்கு வட்டி கட்டியே காலம் போய் இருக்கும்.

கடகம்
kadagam-rasi
கடக ராசிக்காரர்களுக்கு கடன் என்பது ஒரு பெரும் சுமையாகவே அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து வரும். எந்த சுமையை இறக்கி வைத்தாலும், கடன் சுமையை மட்டும் இவர்களால் இறக்க முடியாமல் போயிருக்கும். இவர்கள் வேண்டுமென்றே கடன் வாங்குவது இல்லை. அவர்கள் ஒரு திட்டம் போட்டு வைத்தால், அந்த திட்டத்திற்கு எதிர் மாறாக கடவுள் வேறு ஒரு திருவிளையாடலை நடத்தி விடுவார். அதற்காக வாங்கிய கடனை கடைசி வரை அடைக்க முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தனுசு
thanusu-rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் ராஜயோகமும், தொடர் வறுமையும் மாறி மாறி வரும். தொடர்ந்து என்னடா வாழ்க்கை என்பது போல கடன் தொல்லை வாட்டி வதைத்தாலும் திடீரென எல்லா கடனும் தீர்ந்து அதிசயம் நடக்கும். சரி இனியாவது கடனை வாங்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது மீண்டும் கடன் வாங்க வைக்கும் இந்த விதி. கடன் வாங்குவது என்பது இவர்களுக்கு பெரிய விஷயமே அல்ல. இவர்களுக்கு கடன் கொடுக்க நிறைய பேர் காத்துக் கொண்டும் இருப்பார்கள்.

கும்பம்
kumbam-rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு கடன் தான் வாழ்க்கை என்று ஆகிவிடும். மத்திம வயது வரை இவர்களுக்கு கடன் பிரச்சனை இல்லாமல் இருந்தாலும் அதன் பிறகு கடன் பிரச்சினையைத் தவிர, வேறு எந்த ஒரு பிரச்சனையையும் இவர்கள் பெரிதாக நினைக்க மாட்டார்கள். வாங்கிய கடனை அடைக்கவே மீண்டும் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒரு கடனுக்கு மாற்று இன்னொரு கடன் அல்ல என்பதை இவர்கள் உணரும் காலம் வரும் பொழுது தான் இவர்களுடைய வாழ்வில் மாற்றம் வரும்.