எதை போட்டாலும் கல்லாக மாற்றி தரும் மூலிகை நீர் – வீடியோ

mooligai neer
- Advertisement -

தமிழ்நாடு சித்தர்களின் பூமி. என்னற்ற சித்தர்கள் வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு புனிதமான நிலம். எனவே இங்கு சித்தர்களால் நிகழ்தப்பட்ட சித்து விளையாடல்களுக்கு குறைவேயில்லை. அப்படிபட்ட பல சித்தர்கள் வாழ்ந்த,வாழ்ந்து கொண்டிருகின்ற இடம் தான் தேனி மாவட்ட சுருளி மலைப்பகுதி. இங்கு சுரக்கும் உதகநீரில் எதை போட்டாலும் கல்லாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. வாருங்கள் அது குறித்து இந்த வீடியோவில் பார்ப்போம்.

- Advertisement -
தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

நாம் குழந்தைகளாக இருக்கும் போது பெரியவர்கள் நமக்கு சொன்ன இதிகாச கதைகளில், முனிவர்கள் மற்றவர்களுக்கு சாபமிடும் போது தங்களின் கமண்டலத்திலிருக்கும் நீரை எடுத்து எதிராளியின் மீது தெளித்து அவர்களைக் கல்லாக மாற்றிய சம்பவங்களை கேட்டிருப்போம். இது சாத்தியம் தானா? என்று கூட யோசித்திருப்போம்.

அது போன்ற சம்பவங்கள் உண்மை தான் என உறவைக்கிறது தேனி மாவட்டத்தில், சுருளி மலைப்பகுதியில் சுரக்கும் “உதக நீர்” எனப்படும் ஒருவகை மூலிகை நீர். அற்புதமான சக்திகள் வாய்ந்த இந்த “உதகநீர் மனிதர்களையும் கல்லாக்கும் தன்மைக் கொண்டது” என இங்கிருக்கும் ஆன்மிகச் சாதகர்கள் கூறுகின்றனர்.

மேலும், உயிருள்ள மரங்களைக் கல்லாகவும், கடினமான பாறைகளை மணலாகவும் பின்பு விபூதியாகவும் இந்நீர் மாற்றுவதாக இவர்கள் கூறுகின்றனர்.
இவைதானென்றில்லை இன்றைய காலத்தில் நாம் பயன்படுத்தும் பொருட்களான பிளாஸ்டிக், சிமெண்ட் ஆகியவற்றையும் 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலத்தில் பாறையைப் போல் மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. மனித அறிவிற்கு எட்டாத இவைபோன்ற இயற்கை செய்யும் அதிசயங்கள் இப்புவியில் ஏராளம்.

- Advertisement -