கலப்பு திருமணம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் இதோ

kalappu-thirumanam
- Advertisement -

திருமணம் என்பது வயது வந்த ஆரோக்கியமான ஆண் மற்றும் பெண் இல்லறம் எனும் நல்லற வாழ்வில் இணைந்து நன்மக்கட் பேறு பெற்று, சமுதாயத்திற்கு அறம் செய்து வாழ முன்னோர்களால் உண்டாக்கப்பட்ட ஒவ்வொரு புனித சடங்காகும். உலகின் அனைத்து நாடுகளிலும் அவர்களின் கலாச்சாரத்திற்கேற்ப திருமணங்கள் செய்யப்படுகின்றன. எனினும் திருமண பந்தத்திற்கு உயர்வான இடம் அளிக்கும் இந்திய நாட்டு காலம் காலமாகவே ஒரு இனத்திற்ள்ளாகவே திருமணம் செய்வது ஊக்குவிக்கப்பட்டு, சாதி, மதம் கடந்த கலப்புத் திருமணங்கள் நிராகரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. எனினும் கடந்த ஒரு நூற்றாண்டில் தொடங்கி தற்காலம் வரை பல புதிய தலைமுறையினர் அதிக அளவில் கலப்புத் திருமணம் செய்ய துவங்கியுள்ளனர். கலப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு கிடைக்கின்ற நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Hindu Marriage

கலப்பு திருமணம் நன்மைகள்

சமமான சமுதாயம்
அதிக அளவில் கலப்புத் திருமணங்கள் நடைபெறுவது சமுதாயத்தில் மக்களிடையே இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் குறைந்து அனைவரும் சமம் என்கிற சூழ்நிலையை உருவாக்க உதவுகிறது. கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரின் உறவுகள் அனைவரும் பிறரின் தனிமனித சுதந்திரத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் கொள்ள தூண்டுகிறது.

- Advertisement -

அரசாங்க உதவி

ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயம் உருவாக கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியருக்கு அரசாங்கமும் பலவகையில் உதவுகிறது. கலப்புத் திருமணம் செய்த தம்பதிகளுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கிறது. அவர்களுக்கு அரசாங்கத்தின் இன்ன பிற சலுகைகளும் கிடைக்க வழிவகை செய்கிறது. மேலும் கலப்பு திருமணம் செய்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவைகளிலும் முன்னுரிமைகளும், சலுகைகளும் அரசாங்கம் கொடுக்கிறது.

- Advertisement -

kalappu thirumanam

வரதட்சணை கொடுமை தீர

திருமணத்தின் போது பெண்வீட்டார் மணமகன் வீட்டாருக்கு கொடுக்கும் பணத்தொகை மற்றும் இன்ன விதமான ஆடம்பரப் பொருட்கள் வரதட்சணை எனப்படுகிறது. இந்த வரதட்சணை வழக்கம் பல திருமணமான பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. கலப்புத் திருமணம் புரிந்து கொண்ட பெரும்பாலான தம்பதிகளில் பெண்களுக்கு இந்த வரதட்சணை பிரச்சனை என்பது அறவே இல்லாமல் போகிறது. பெண் வீட்டாருக்கும் பொருளாதார சுமை இல்லாமல் தடுக்கிறது.

- Advertisement -

பரந்த மனப்பான்மை

கலப்புத் திருமணம் செய்து கொள்கிறவர்கள் பரந்த மனப்பான்மை உடையவர்களாக மாறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தம்பதிகள் இருவரும் ஒருவர் மற்றவரின் கலாச்சாரங்களையும், பழக்கவழக்கங்களையும் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் அவர்கள் இருவரும் தங்களின் பாரம்பரிய விழாக்கள் போன்றவற்றை ஒன்றாக சேர்ந்து கொண்டாடி சமுதாய நல்லிணக்கத்திற்கு உதவுகின்றனர்.

kalappu thirumanam

ஆரோக்கியாமான, அறிவாற்றல் மிக்க குழந்தைகள்

ஒரே இனத்திற்குள்ளாக திருமணம் செய்து கொள்ளும் நபர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள் அறிவு குறைபாடு உள்ளவர்களாகவும், பல்வேறு பரம்பரை நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் பெற்றவர்களாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் கலப்புத் திருமணம் செய்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகள் நல்ல ஆரோக்கியமான உடலையும், சிறந்த அறிவாற்றலையும் பெற்றுக் கொள்வதாகவும் பல முறை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்திருக்கின்றன.

இதையும் படிக்கலாமே:
கழுதை பால் நன்மைகள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kalappu thirumanam benefits in Tamil. It is also called as Kalappu thirumanam nanmaigal in Tamil or Kalappu thirumanam palangal in Tamil.

- Advertisement -