இத மட்டும் செஞ்சு பாருங்க! எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும், கணவன் மனைவி கூட, ஒரே ஒரு நாளில் ராசியாக ஒற்றுமையாக மாறிவிடுவார்கள்.

husbund-and-wife
- Advertisement -

சில வீடுகளில் கணவனும் மனைவியும் பார்ப்பதற்கு கணவன் மனைவி போலவே இருக்க மாட்டார்கள். பாம்பும் கீரியும் போல, எலியும் பூனையும் போல எப்போது பார்த்தாலும் சண்டை போட்டு முட்டி கொண்டே இருப்பார்கள். அவர்கள் உறவு என்பது சுமூகமாக இருக்கவே இருக்காது. அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால், அந்த குழந்தையின் வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு, அந்த குழந்தையின் மனசு நொந்து போகும் அளவிற்கு இவர்களது சண்டை இருக்கும். இதன் மூலம் வீட்டில் இருக்கும் மற்றவர்களுடைய நிம்மதியும் கெட்டுப்போகும். கணவன்-மனைவிக்குள் சண்டை வராமல் இருக்காது. நிச்சயமாக சண்டை என்ற ஒன்று குடும்பத்தில் இருந்தால் தான் இல்லற வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும்.

fight2

ஆனால் சண்டை போடுவதையே இல்லற வாழ்க்கையாக அமைந்து விட்டால் அது சலிப்பு தட்டி விடும். ஏன் தான் திருமணம் செய்தோம் என்ற எண்ணத்திற்கு கொண்டு போய்விடும். சரி, வீட்டிலிருக்கும் கணவன்-மனைவிக்குள் இருக்கும் விரிசல் சில நாட்களிலேயே சரியாக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

மனைவி கணவனுடன் சண்டை வரக்கூடாது என்று நினைத்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். உங்களுடைய வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் தூபக்கால் இருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் ஒரு சிறிய தட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொட்டாங்குச்சி அல்லது தேங்காய் நாரை வைத்து நெருப்பு மூட்டி கொள்ளுங்கள். தூபம் போட எப்படி நெருப்பை மூட்டுவோம் அப்படிதான்.

neruppu

அந்த நெருப்பு அப்படியே இருக்கட்டும். மனைவி சாப்பிடும் போது தன்னுடைய தட்டில் சாதத்தை போட்டுக்கொள்ள வேண்டும். சாதத்தை எச்சில் செய்வதற்கு முன்பாகவே ஒரு பிடி சாதத்தை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்து விட வேண்டும். நிறைய சாதம் எடுக்க வேண்டாம். ஒரு சிறிய ஸ்பூன் அளவு சாதத்தை எடுத்து தனியாக வைத்தால் போதும்.

- Advertisement -

சாப்பிட்டு முடித்த பின்பு, தனியாக எடுத்து வைத்த அந்த சாதத்தை, தூபக்காலில் தயாராக இருக்கும் நெருப்பில் போட்டு விட்டு, அந்த நெருப்பில் கொஞ்சமாக காய்ச்சாத பச்சை பாலில் ஒரு ஸ்பூன் அளவு ஊற்றி விடுங்கள். பரிகாரம் அவ்வளவுதான். சாப்பிடும்போது எடுத்து வைத்திருக்கும் அந்த சாப்பாட்டை முதலில் நெருப்பில் போட்டு விட்டு, அதன் பின்பு அதை சாந்தப்படுத்த பசும்பாலை அந்த நெருப்பில் ஊற்றி விட்டோம்.

rice

மதியம் சாப்பிடும் போதும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இரவு சாப்பிடும் போதும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். இப்படி செய்தால் கணவன் மனைவி விரிசல் சரியாகிவிடுமா என்ன? நீங்களும் இதை சோதித்து தான் பாருங்களேன். பரிகாரத்திற்கு பயன்படுத்திய அந்த நெருப்பை கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள்.

family fight

உங்களுக்கு இந்த பரிகாரம் பலன் அளித்தால் நிச்சயமாக குடும்பத்தில் நிம்மதி நிலவும். சந்தோஷம் இருக்கும். தேவையற்ற பிரச்சினைகளுக்கு விடிவு காலமும் பிறந்துவிடும். இல்லற வாழ்க்கை சந்தோஷமாக இருந்தால் தானே நம்முடைய வாழ்க்கை முழுமை பெறும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -