கணவன், மனைவியின் பேச்சை கேட்டு நடக்க, கணவன் மனைவிக்குள் ஆயுசுக்கும் சண்டை  வராமல் இருக்க, மனைவி கையில் இந்த 1 பொருள் இருந்தாலே போதும்.

fight

கணவன் மனைவிக்குள் ஆயுசுக்கும் பிரச்சனை வராமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. கணவன் மனைவி, குடும்பம் என்றால் கட்டாயம் பிரச்சனை வந்து தான் ஆகும். ஆனால் அந்த பிரச்சினையை நாம் எப்படி சமாளித்து, நம்முடைய குடும்பத்தை ஒற்றுமையாக நல்லபடியாக எப்படி வழி நடத்திச் செல்வது? என்பதில் தான் சாமர்த்தியமே அடங்கி உள்ளது. இந்த சாமர்த்தியம் பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்களிடத்தில் தான் இருக்க வேண்டும். ஒருவேளை வீட்டில் இருக்கும் பெண்மணியின் கணவர் சரியில்லை என்றாலும் சரி, வாழ்க்கையில் தடம் மாறி, தடுமாறி வேறு ஏதாவது ஒரு தவறான பாதையில் சென்றாலும் சரி, அவரை நல்ல முறையில் மாற்றி வாழ்க்கையின் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கடமையும் அந்த மனைவியின் கையில்தான் உள்ளது.

fight2

என்ன செய்தும் என் கணவர் திருந்தவில்லை! என்ன செய்தும் என் கணவரை, என்னால் நல்ல வாழ்க்கையில், நல்ல பாதையில் வழி நடத்திச் செல்ல முடியவில்லை வீட்டில் எந்நேரமும் சண்டை சச்சரவு! ஒரு நல்ல மனைவியை, ஒரு கணவர் புரிந்து கொள்ளாமல் குடும்பத்தில் பிரச்சனைகள் வந்தால் அதற்கு என்ன தீர்வு? சித்தர்களால் சொல்லப்பட்ட ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கணவன் மனைவிக்குள் பிரச்சினை இருந்தால் வீட்டில் நல்லதுக்காக மட்டுமே இந்த பரிகாரம் செய்யப்பட வேண்டும். தவறான எந்த ஒரு செயலுக்கும் இந்த பரிகாரத்தை நம்மால் பிரயோக படுத்த முடியாது என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவுகூற வேண்டும். சரி, இந்த பரிகாரத்திற்கு நான் பயன்படுத்தப் போகும் பொருள் வசம்பு. வசிய சக்தி அதிகம் கொண்ட இந்த வசம்பை நாம் என்ன நினைத்து, நம் கையில் வைத்துக் கொண்டிருக்கின்றோமோ அது நமக்கு வசமாகும்.

vasambu 3

வசம்பை பேரம் பேசாமல், கடையிலிருந்து முடிந்தால் வசம்பின் பெயரை உச்சரிக்காமல் வாங்க வேண்டும். ‘உரைப்பான்’ என்று சிலர் சொல்லுவார்கள். சிலர் ‘பெயர் சொல்லாதது’ என்று இந்த வசம்பினை கேட்டு வாங்குவார்கள். இப்படியாக கடையில் இருந்து வாங்கப்பட்ட புது வாசம்யை உங்களுடைய வீட்டிற்கு கொண்டு வந்து, முடிந்தால் கோமியத்தில் நன்றாக அலசி கொண்டு, மீண்டும் ஒருமுறை நல்ல தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இல்லையென்றால் அந்த வசம்பை ஒரு மணி நேரம் முழுவதும் பன்னீரில் ஊறவைத்து அதன் பின்பு, அந்த வசம்பை பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். குடும்பத்தில் கணவரால் பிரச்சினை இருக்கும் போது, மனைவி அதிகாலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, சூரியன் உதயமாகும் காலை 6 மணி அளவில் பூஜை அறையில் உள்ள படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். குலதெய்வத்தை நினைத்துக் கொண்டே தீபம் ஏற்றங்கள்.

pray

குலதெய்வத்தை வேண்டி இந்த வசம்பை உங்களது வலது உள்ளங்கையில் வைத்துக் கொள்ள வேண்டும். மனதார ‘உங்கள் கணவர், உங்கள் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். தீய பழக்க வழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். குடும்பத்தில் நிம்மதி நிறைந்திருக்க வேண்டும். சண்டை சச்சரவுகள் வருவது குறைய வேண்டும்.’ என்று வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வேண்டுதலை, ஆழ்மனதில் இருந்து இறைவனிடம் சொல்லி வரம் கேட்க வேண்டும்.

இந்த வேண்டுதல்கள் நிரம்பியிருக்கும் வசம்பை, என்ன செய்வது? முதலில் உங்களுடைய கணவர் பயன்படுத்தும் துணிகளோடு இந்த வசம்பை வைத்தால், உங்களது கணவர் உங்கள் வசம் ஆவார். அப்படி இல்லை என்றால் இரண்டாவது, உங்கள் கணவர் கட்டிய தாலி உங்களது கழுத்தில் இருக்கும். அந்த தாலியோடு இந்த வசம்பு இருக்க வேண்டும்.

வசம்பை மஞ்சள் கயிறு கட்டி தாலி சரடுடன் கட்டி விடக்கூடாது. தாலியுடன் பழக்கம் இல்லாமல் எந்த ஒரு பொருளையும் சேர்த்து கட்டக்கூடாது என்று சொல்வார்கள். மஞ்சள் கயிறு கட்டி அதை உங்களுடைய கழுத்தில் தனியாக அணிந்து கொண்டாலும், வசம்பு உங்களுடைய நெஞ்சுக்குழியில் தாலியோடு சேர்ந்து இருக்கும் அல்லவா? அப்படி வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளலாம்.

family1

இதில் ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுத்து கொண்டு நீங்கள் வேண்டுதல் செய்த வசம்பை உங்கள் கணவர் சம்பந்தப்பட்ட பொருளோடு சேர்த்து வையுங்கள். இப்படி செய்தாலே போதும். உங்கள் கணவர் உங்கள் வசம் ஆவார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். குடும்ப நன்மைக்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நன்மைக்காக மட்டுமே நல்ல, எண்ணம் கொண்ட மனைவிகள், தங்களுடைய கணவரை நல்வழிப்படுத்த மட்டுமே இந்த பரிகாரம் பயன்படும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.