பிரிந்த கணவன் மனைவியை வெறும் 10 நிமிடத்தில் ஒன்றாக சேர்த்து விடலாம். வெறும் 1 எலுமிச்சை பழத்தை வைத்து! நம்ப முடியவில்லையா? இப்படி முயற்சி செய்து தான் பாருங்களேன்!

fight

பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்ப்பதற்கு ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து 10 நிமிடத்தில் செய்யக்கூடிய தாந்திரீக பரிகாரத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தாந்திரீக பரிகாரத்தை தவறாக யாரும் பிரயோக படுத்தக் கூடாது. அப்படி தவறாக பயன்படுத்தினாலும் அது உங்களுக்கு பலிக்காது. கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும். மனைவி கணவனோடு சேர வேண்டும் என்று செய்யலாம். பிரிந்த உறவுகள் ஒன்றாக சேர வேண்டும் என்றும் செய்யலாம்.

fight2

பெற்றவர்கள் பிள்ளைகளை விட்டு பிரிந்து இருந்தாலும், பிள்ளைகள் பெற்றவர்களை விட்டு பிரிந்தாலும், சகோதர சகோதரிகள், மாமியார் மருமகள் இப்படியாக எந்த உறவுகளை சேர்க்க வேண்டும் என்றாலும் நியாயமான கோரிக்கைக்காக இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

முதலில் ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து, உங்களிடம் யார் வந்து சேர வேண்டுமோ, அவர்களுடைய பெயரை எழுத வேண்டும். எப்படி எழுத வேண்டும்? என்னுடைய மனைவி என்னுடன் வந்து சேரவேண்டும் என்று அவர்களுடைய பெயரை குறிப்பிட்டு எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. எடுத்துக்காட்டிற்கு ‘கவிதா’ என்ற பெயரை வைத்துக் கொள்வோம்.

lemon

‘என்னுடைய மனைவி கவிதா மனம் மாறி என்னுடனே வந்து சேர்ந்து வாழ வேண்டும்’. என்று அந்த காகிதத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து, அந்த எலுமிச்சம் பழத்தின் மேல் பக்கத்தில் ஒரு பேனாவை கொண்டு உங்களது மனைவி பெயரை எழுதி, உங்கள் உள்ளங்கைகளில் வைத்து உங்கள் மனைவி உங்களிடம் சேர வேண்டும் என்று மகா காளியை மனதிற்குள் வேண்டி, அந்தப் பழத்தை அந்த காகிதத்தில் வைத்து மடித்து கொண்டுபோய் அரசமரத்தடியில் உள்ள மண்ணில் புதைத்து வைத்து விட்டு வர வேண்டும். இதுதான் முக்கியமான விஷயம்.

பரிகாரத்தை யார் வேண்டுமென்றாலும் செய்துவிடலாம். குறிப்பாக இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும். மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் அரச மரத்திற்கு அடியில் புதைத்து விட வேண்டும். அடுத்த 10 நாட்களில்  முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக பிரிந்த உங்கள் மனைவியோ அல்லது கணவரோ உங்களுடன் வந்து ஒன்றாக சேர்ந்து விடுவார்கள். (கணவர் தன்னுடன் வந்து சேர வேண்டும் என்றால் மனைவி, கணவரின் பெயரை எழுதி இந்த பரிகாரத்தை செய்யலாம்.)

arasa-maram1

இதேபோல் தான் எந்த உறவுகள் உங்களை வந்து சேர வேண்டும் என்றாலும் அந்த உறவுகளை பெயரைச் சொல்லி, அவர்களுடைய பெயரை குறிப்பிட்டு அந்த காகிதத்தில் எழுதி, அந்த குறிப்பிட்ட நபரின் பெயரை அந்த எலுமிச்சம்பழத்திலும் எழுதி, அரச மரத்தடியில் புதைத்து வைத்தால் நிச்சயம் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும் என்று சொல்கிறது தாந்த்ரீக பரிகாரம். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பார்த்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை முயற்சி செய்து கொள்வோம்.