சிவன் வடிவ மலை மீது தியானம் செய்து இறந்தவர்களை சந்திக்கும் வீடியோ

Kondarangi hills
- Advertisement -

நம்முடையடைய மூதாயர்களான பித்ருக்களுக்கு நாம் அமாவாசை நாளில் படையலிட்டு அவர்கள் மனதை குளிர்விப்பது வழக்கம். அமாவாசை அன்று நாம் இடும் படையலை வந்து உண்பதாக ஒரு நம்பிக்கையை. ஆனால் அதை நாம் பார்த்தது கிடையாது. ஆனால் ஒரு மலை மீது நாம் தியானம் செய்தால் நம்முடைய மூதாதையர்களை காண்பதோடு அவர்களோடு உரையாடலாம் என்று கூறப்படுகிறது. அதை ஒருவர் செய்தும் காட்டியுள்ளார். இதோ அதன் வீடியோ.

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அமைந்துள்ளது கொண்டரங்கி மலை. இந்த மலை மீது பாண்டவர்கள் தியானம் செய்ததாக நம்பப்படுகிறது . இதில் இருந்து கொண்டரங்கி மலை வரலாறு மிகவும் தொன்மையானது என்பதை நம்மால் உணர முடிகிறது. லிங்க வடிவில் அமைந்துள்ள இந்த மலை அடிவாரத்தில் கெட்டிமல்லீஸ்வரர் என்னும் சிவன் கோவில் உள்ளது. இந்த மலையில் எவர் ஒருவர் தவம் செய்தாலும் அவரின் வாழ்க்கை நிலையே மாறும் என்று கூறப்படுகிறது.

இந்த மலையில் இருந்து பார்த்தல் பழனி மாலை தெரியும். பழனி மலையில் வீற்றிருக்கும் முருகனுக்கும், கொண்டரங்கி மலையில் இருக்கும் மல்லிகார்ஜுன சுவாமிக்கு சூட்சும ரீதியில் தொடர்பு உள்ளதாக நம்பப்படுகிறது. இந்த மலையில் அர்ஜுனன் தவம் செய்த இடத்தில் இருந்து மந்திரங்களை ஜபித்தவாறு நாம் தவம் செய்தால் நமக்கு சிவன் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதை நம்மால் வினாடிக்கு வினாடி உணரவும் முடியும் என்று கூறுகிறார்கள் அங்கு தியானம் செய்தவர்கள். இந்த மலை மீது உள்ள ஒரு பாறை மேல் அமர்ந்து தியானம் செய்தால் நாம் வேறு உலகத்திற்கு சென்று நமது பித்ருகளோடு உரையாடலாம் என்று கூறப்படுகிறது. அப்படி ஒருவர் தவம் செய்து அவருடைய அனுபவத்தை பகிர்ந்துள்ள வீடியோ பதிவு மேலே இணைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -