கண்ணகி தான் மரியம்மனாக வழிபடப்படுகிறாரா ? அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள் வீடியோ

Kannagi

“கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என உண்மையை அறிந்து கொள்வதற்கான விதியை மேற்கூறிய வரிகளில் எளிமையாக கூறிவிட்டனர் நம் தமிழ் ஆன்றோர்கள். எந்த ஒரு விஷயத்திலும் தீர விசாரிக்காமல் அவசர முடிவுகள் எடுத்த சம்பவங்கள் பல நம் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கின்றன. அப்படி தவறான தீர்ப்பால் தன் வாழ்க்கை பாதிக்கப்பட்டு, தனது கற்பின் சிறப்பால், இன்று தமிழர்கள் அனைவராலும் தெய்வமாக வழிபடப்படும் கண்ணகியை பற்றிய வீடியோ இதோ.

சென்னை பரங்கிமலையில் வசிக்கும் “கண்ணகி’ உபாசகர் ஒருவர், “சிலப்பதிகார காவியத்தில்” “கற்பு நெறிக்கு” இலக்கணமாக திகழ்ந்த “கண்ணகி” தெய்வத்தின் துணைகொண்டு, தன்னை நாடி வருவோர்களின் குறைகளை நீக்குகிறார்.

ஒவ்வொரு மனிதனிடமும் சில வகையான தீங்கு விளைவிக்காத “ஆவிகள்”, அம்மனிதர்களை எந்நேரமும் தொற்றிக்கொண்டிருப்பதாகவும், அதை இங்கு கண்ணகி அம்மன் துணை கொண்டு, “வேப்பிலையால்” அடித்து, அத்தகைய ஆவிகளை அது பீடித்தவர்களிடமிருந்து தாம் நீக்குவதாக கூறுகிறார்.

மேலும் நமது குலதெய்வத்தையும், இறந்து போன நமது முன்னோர்களையும் முறையாக வழிபடுவதன் மூலம், நம் வாழ்வில் ஏற்படும் எத்தகைய பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என கூறுகிறார். அப்படி இந்த “கண்ணகி உபாசகர்” தங்கள் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளை நீக்கியதைப் பற்றி இங்கு பகிர்ந்து கொள்கின்றனர் இங்கு வழக்கமாக வரும் சிலர்.

சிலப்பதிகாரத்தில் “மதுரை மாநகரை” எரித்த கண்ணகி, ஒரு தெய்வப் பிறவி என்று கருதப்பட்டு, அக்கண்ணகிக்கு நம் மாநிலம் முழுவதும் பல கோவில்கள் கட்டப்பட்டதாகவும், ஆனால் அப்போது இங்கு ஆட்சி புரிந்த மன்னர்கள், அக்கண்ணகி தெய்வத்தின் உக்கிர சக்தியால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என கருதி, அக்கண்ணகி கோவில்களின் பெயரை வேறு அம்மன் தெய்வம் பெயரை சூட்டி மாற்றிவிட்டதாக இவர் கூறுகிறார்.

மேலும் “ஆடி மாதத்தில்” தான் கண்ணகி மதுரை மாநகரை எரித்ததால், தெய்வமாக மாறிவிட்ட கண்ணகியை சாந்தப்படுத்துவதற்காக தான், அந்த ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏதும் செய்யாமல் இருக்கும் வழக்கம் தொடங்கியதாகவும், மேலும் அந்த கண்ணகியை அமைதிப்படுத்துவதற்காகவே ஆடி மாதத்தில் “கூழ் ஊற்றுதல், தீ மிதித்தல்” போன்ற விஷயங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறுகிறார்.