கெட்ட எண்ணத்தோடு உங்கள் வீட்டிற்குள் வருபவர்களுக்கு, இதை மட்டும் முதலில் கொடுத்திடுங்க போதும். அவர்களுடைய கண் திருஷ்டியும், பொறாமையும் உங்களை ஒன்றுமே செய்யாது.

pasu
- Advertisement -

வாழ்க்கையில் நாம் எதை பார்த்து பயப்படுகின்றனரோமோ இல்லையோ, இந்த ஊர் உலகத்தில் இருப்பவர்களுடைய பொறாமை கண்ணிற்கும், கண் திருஷ்டிக்கும், பெருமூச்சுக்கும் பயந்துதான் ஆக வேண்டும். நம்முடைய குடும்பம் அளவான செல்வத்தோடு சந்தோஷமாக, மன நிம்மதியாக இருக்கும். எதிர்பாராமல் நம் உறவினர்களோ, நண்பர்களோ அல்லது வேறு எவரோ நம் வீட்டிற்கு வருகிறார்கள். நம் வாழ்க்கை சூழலை பார்த்து சட்டென்று அவர்களுக்கு பொறாமை வந்து விடும். ‘இவர்களிடம் பணம் காசு கூட நிறைய இல்லை! வசதியும் குறைவாகத்தான் உள்ளது. இருப்பினும் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்களே’ என்று ஒரு பெருமூச்சு விட்டு சென்றால், அவ்வளவு தான். நன்றாக இருக்கும் குடும்பத்தில் அடுத்த நிமிடமே கலகம் பிறக்க ஆரம்பித்துவிடும்.

happy

இத்தனைக்கும் நம்மளை பார்த்து பொறாமைப்படுபவர்கள், நம்மை விட வசதியானவர்களாகத்தான் இருப்பார்கள். இருப்பினும், அவர்களுக்கு நம் குடும்பத்தின் மேல் ஒரு பொறாமை குணம். நம்மால் இப்படி சந்தோஷமாக வாழ முடியவில்லையே என்று! இது ஒரு ரகம்.

- Advertisement -

சில பேருக்கு பணம் காசு இருக்காது. நல்ல மனம் இருக்கும். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வீட்டிற்கு, இப்படிப்பட்டவர்கள் சென்றால், அவர்களுடைய மனதில் ஒரு ஏக்கம் வரும். நம்முடைய வீட்டில் இத்தனை வசதி இல்லையே, என்று! அவர்களுடைய மனம் நன்றாக இருந்தாலும்கூட, அவர்களுடைய ஏக்கம் கண்திருஷ்டி ஆக மாறும். யாரையும் குறை கூறுவதற்காக இந்த பதிவு அல்ல. நாம் எல்லோரும் இப்படிப்பட்ட பிரச்சனையை அனுபவபூர்வமாக அனுபவித்திருப்போம். நமக்கும் கூட இப்படிப்பட்ட ஏக்கம் வருவது இயற்கை தான்.

donkey milk

இப்படி நம்மை பற்றி யார் எதை நினைத்தாலும், அதனுடைய தாக்கம் நம்மை வந்து சேராமல் இருக்க வேண்டுமென்றால், நாம் என்ன செய்வது? இதற்கு சாஸ்திர ரீதியாக ஒரு சுலபமான வழி இருக்கிறது. நம் வீட்டிற்குள் வருபவர்களை முதலில் மரியாதையாக அழைத்து, அமரவைத்து முதலில் வயிறு குளிர தண்ணீர் கொடுக்க வேண்டும். என்று சொல்வார்கள் அல்லவா? அதன் பின்பு டீ காபி கொடுப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு ஒரு டம்ளர் பால் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இந்தப் பாலை குடித்தால் நிச்சயம் நம்மை பார்த்து பொறாமைப் படுபவர்களுடைய கண் திருஷ்டியும், பெருமூச்சும் நம்மை எதுவுமே செய்யாது. இந்த பாலை கொடுப்பதற்கு பின்னால் ஏதாவது காரண காரியங்கள் இருக்குமோ? என்று சிந்திக்கிறீர்களா? இதனுடைய பின்னணியையும் நாம் தெரிந்து கொள்வோம். பொதுவாகவே அந்த காலங்களில் எல்லாம் வீட்டில் விசேஷங்கள் நடந்தால் தங்களுடைய வீட்டுக்கு வருகை தருபவர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு, இறுதியாக பால்பாயசம் வைக்கும் பழக்கம் இருக்கும். இன்று நாகரிக மோகத்தில் அந்த பால் பாயாசத்திற்கு பதிலாக நாம் வேறு ஏதேதோ இனிப்பு பலகாரத்தை போடுகின்றோம். ஆனால், இத்தனை வகையான இனிப்பு வகைகள் இருக்கும் போது எதற்காக அவர்கள் இந்தப் பால் பாயாசத்தை விசேஷங்களுக்கு போட வேண்டும்.

food

சற்று சிந்தித்து பாருங்கள். நம் வீட்டுக்கு வந்து நம் விசேஷங்களில் கலந்து கொள்பவர்களுடைய எண்ணம், பொறாமை எண்ணமாக இருந்தாலும், நம் வீட்டு விசேஷத்தை பார்த்து கண் வைப்பவர்களாக இருந்தாலும், அவர்கள் சாப்பிட்டு விட்டு இறுதியாக அந்த பால் பாயாசத்தை குடிக்கும் போது, அவர்களிடம் இருந்து வெளிவந்த தோஷம் நம்மையும், நம் வீட்டை தாக்கக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி ஒரு சாஸ்திரம் இருந்தது என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது.

- Advertisement -

house

புது வீடு குடி போகும் போது குறிப்பாக பால் காய்ச்சி அனைவருக்கும் ஒரு டம்ளர் பால் கொடுப்பதும் இதற்காகத்தான். நம்முடைய வீட்டை பார்ப்பவர்களுக்கு, பத்தில் ஒருவருக்காவது, கட்டாயம் நமக்கு இப்படி ஒரு வீடு இல்லையே என்ற ஏக்கம் வர தான் செய்யும். அந்த ஏக்கத்தின் மூலம் நம் வீட்டிற்கு பாதிப்புகள் வராமல் இருக்க இப்படி ஒரு சம்பிரதாயம் கொண்டுவரப்பட்டது.

family

இவ்வளவு ஏங்க, கோபத்தோடு இருக்கக்கூடிய சுவாமியை சாந்தம் செய்ய வேண்டும் என்றாலும், கோவில் பாலபிஷேகம் தானே செய்கிறார்கள். இதுவும் ஒரு ஐதீகம் தான். முப்பத்துமுக்கோடி தேவர்கள் வாழும் பசுமாடு கொடுக்கும் பாலிற்க்கு எதையும் தனிய வைக்கும் சக்தி உள்ளது.

pasu

நம்முடைய முன்னோர்கள் எந்த விஷயத்தையும் காரண காரியம் இல்லாமல் நமக்கு சொல்லி வைக்கவில்லை என்று இப்போது புரிகிறதா? முடிந்தவரை இப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்கள் உங்க வீட்டுக்கு வந்தால், பசும்பாலில் கொஞ்சம் சர்க்கரை போட்டு கொடுக்கலாம். பசும்பால் கிடைக்கவில்லை என்றால், உங்கள் வீட்டில் எந்த பால் உள்ளது அந்த பாலையை கொடுங்கள். வேறு வழி கிடையாது.

கண் திருஷ்டி பொறாமை எண்ணம் பெருமூச்சு இவை எல்லாவற்றையும் தாண்டி, நீங்க நல்லாவே இருக்க கூடாது, உங்களுக்கு ஏதாவது கெடுதல் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுடைய எண்ணத்தை மாற்றும் அளவிற்கு கூட இந்த ஒரு டம்ளர் பாலுக்கு சக்தி உள்ளது. உங்களுக்கு பிரச்சனை தரவங்க யாராவது உங்க வீட்டுக்கு வந்தா, உங்க கையால அவர்களுக்கு ஒரு டம்ளர் பாலைக் கொடுத்து சோதித்து பாருங்கள். பலன் கிடைத்தால் உங்களுக்கு எத்தனை லாபம்! பலனளிக்கவில்லை என்றால் நஷ்டமாக ஒரு டம்ளர் பால் தானே. முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த பொருட்களை எல்லாம் உங்கள் வீட்டு பீரோவில் எக்காரணத்தைக் கொண்டும் ஒன்றாக சேர்த்து வைக்காதீர்கள். வருமானம் வந்து கொண்டே இருந்தாலும், கையில் பணம் தங்காமல் போக இதுவும் ஒரு காரணம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -